states

உக்ரைன்-ரஷ்யா போர் கள நிலவரம்

உக்ரைனுக்கு ஆதரவாக நேரடியாக களத்தில் இறங்க நினைக்கும் தேசங்களுக்கு புடின் கடுமை யாக எச்சரிக்கை விடுத்துள்ளார். “வேறு எவரிடமும் இல்லாத ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன. அவற்றை பயன்படுத்துவது குறித்து ஏற்கெனவே முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டன” எனக்கூறி பீதியை கிளப்பியுள்ளார். 

ரஷ்ய எண்ணெய்யை அல்லது எரிவாயுவை ரூபிள்  மூலம் கொள்முதல் செய்வது வர்த்தக தடைகளுக்கு முரண்பட்டது அல்ல என யுனிப்பர் எனும் ஜெர்மனி எரிசக்தி நிறுவனம் கூறியுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் வறட்டு பிடிவாதம் சரிகிறதா?

ரஷ்ய எரிசக்தியை ரூபிள் மூலம் கொள்முதல் செய்வது என ஹங்கேரி/ ஆஸ்திரியா/ செர்பியா ஆகிய ஐரோப்பிய தேசங்கள் முடிவு செய்துள்ளன.  பின்லாந்து/ போலந்து/ பல்கேரியா ஆகிய தேசங்கள்  ரூபிள் கொள்முதல் இல்லை என முடிவு செய்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் பிளவு?

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளால் தரப்பட்டு  சப்போரோசியா எனும் ஊரில் பதுக்கி வைக்கப்ப ட்டிருந்த  மிகப்பெரிய எண்ணிக்கையிலான ஆயுதங் களை ரஷ்யா ஏவுகணைகள் அழித்து விட்டன.

ரஷ்ய எரிசக்தியை ரூபிள் மூலம் கொள்முதல்  செய்யும் ஐரோப்பிய தேசங்களிடமிருந்து ரூபிள் தர  மறுக்கும் தேசங்கள் வாங்கி கொள்வது என முடிவு செய்துள்ளதாக செய்திகள் உலவுகின்றன. கூழுக்கும் ஆசை! மீசைக்கும் ஆசை!! ரஷ்யாவின் எண்ணெய் வேண்டும்;  ஆனால் ரூபிள் தரக்கூடாது!

உக்ரைனுக்கு இதுவரை சுமார் 3 பில்லியன் டாலர்கள்  அதாவது  சுமார் ரூ.24,000 கோடி மதிப்புள்ள ஆயுதங்களை அமெரிக்கா கொடுத்துள்ளது. இதே நிதியை அமெரிக்காவில் உள்ள ஏழைகளுக்கு பைடன் அரசாங்கம் தருமா?  போர் வெறி அமெரிக்க நிர்வாகத்தின் மரபணு!

ஐரோப்பாவும் அமெரிக்காவும் விதித்த தடைகள் ரஷ்யாவை சிதைக்கவில்லை எனவும் புதிய தடைகள் தேவை எனவும் போலந்து பிரதமர் மொராவெய்க்கி அங்கலாய்த்துள்ளார். ஆனால் அவரது தேசத்தில் மட்டும் சுமார் 30 லட்சம் உக்ரைன் அகதிகள் தஞ்சம் புகுந்துள்ளனர். அதன் பொருளாதார தாக்கம் குறித்து சிந்திக்க இவருக்கு நேரமில்லை!

உக்ரைனுக்கு 66 மில்லியன் டாலர் பெறுமான ஆயுதங்களை சுவீடன் தந்துள்ளது. இதற்கான ஈட்டு தொகையை சுவீடன் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேட்கிறது. கிடைக்குமா?

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது போல தைவானுக்கும் கொடுத்து சீனாவை வழிக்கு கொண்டு  வர வேண்டும் என பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் நஞ்சு கக்கியுள்ளார். இதுவரை  கண்டிராத ஒரு முட்டாளை வெளியுறவு அமைச்சராக  பிரிட்டன் பெற்றுள்ளது என பலரும் அவரை விமர்சிக் கின்றனர். ஆனால்  ஏகாதிபத்திய சிந்தனை இப்படி வெளிப்படுவதில் என்ன ஆச்சர்யம் உள்ளது?

;