states

போனஸ் கோரி பொதுத்துறை நிறுவன ஊழியர் சங்கங்கள் அக்.17 இல் போராட்டம்

சென்னை, அக்.13- ஊழியர்களுக்கு போனஸ் வழங்கக்கோரி  தமி ழக அரசின் பொதுத்துறை நிறுவன சங்கங்கள் ஒன்றி ணைந்து அக்டோபர் 17 அன்று  மாநிலம் தழுவிய அளவில்  ஆர்ப்பாட்டத்தை நடத்து கின்றன. இதுகுறித்து ஈரோட்டில் நடைபெற்ற சிஐடியு மாநி லக் குழு கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் வரு மாறு: தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களான மின்  சார வாரியம், அரசு போக்கு வரத்து, ஆவின், டாஸ்மாக்,  சிவில் சப்ளை கார்ப்பரேசன், சர்க்கரை ஆலைகள், கூட்டு றவு சங்கங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன ஊழி யர்களுக்கு 2021-22ஆம்  ஆண்டிற்கான போனஸ் கோரிக் கையை நிர்வாகங்களிடம் சங்கங்கள் சார்பில் கொடுக் கப்பட்டுள்ளது.   தமிழக அரசு பொதுத் துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும்போது தொழிற்சங்கங்களோடு கலந்து பேசாமல் தன்னிச்சை யாக அறிவிக்கும் நடை முறை தொடர்ந்து கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.  

தொழிற்சங்கங்களை முறை யாக அழைத்துப்பேச வேண்  டுமென தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறோம்.  கடந்த  2 ஆண்டுகளாக கொரோனா வை காரணம்காட்டி போனஸ்  குறைக்கப்பட்டது.  குறிப்  பாக, அரசு போக்குவரத்து, மின்சார ஊழியர்கள், டாஸ்  மாக் ஊழியர்கள் போற் றோர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக 20 சதம் போனஸ் பெற்று வந்தனர்.  தற்போது கொரோனா பாதிப்புகள் சரி யாகி, கடந்த காலங்களைப் போல் முழுமையாக நிர்வா கங்கள் செயல்பட்டு வரு கின்றன.   எனவே கடந்த ஆண்டு  கொரோனாவை காரணம் காட்டி  அரசு மேற்கொண்ட போனஸ் குறைப்பை கை விட வேண்டும்.  மேலும் தொழிற்  சங்கங்கள் வைத்துள்ள கோரிக்கை அடிப்படையில், தொழிற்சங்கங்களை அழைத்துப்பேசி, போனஸ் பட்டுவாடா செய்ய வேண் டும்.   இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுத்துறை நிறுவனங்களில் செயல் படும் சிஐடியு சங்கங்கள் ஒன்  றிணைந்து வருகிற அக்டோ பர் 17 ஆம் தேதி மாவட்ட  தலைநகரங்களில் ஆர்ப்பாட்  டம் நடத்த சிஐடியு தமிழ் மாநி லக்குழு முடிவு செய்துள் ளது.   இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

;