states

தீக்கதிர் விரைவு செய்திகள்

குமரி செல்கிறார் முதல்வர்

சென்னை,செப்.6- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மூன்று நாள் பயணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு செல்கிறார். சென்னையிலிருந்து புதன் (செப். 7) காலை 11 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி சென்று அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி செல்கிறார். அங்கு, ராகுல் காந்தி பங்கேற்கும் பாதயாத்திரையை தொடங்கி வைக்கிறார். பிறகு, அங்கிருந்து கார் மூலம் திருநெல்வேலிக்கு வருகை தந்து இரவு தங்குகிறார். வியாழக்கிழமை (செப். 8)  காலையில் திருநெல்வேலி மாவட்டத் தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு நலத்திட்டங்களை வழங்குகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதுரைக்கு செல்கிறார்.  9 ஆம் தேதி காலை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தியின் இல்லத் திருமண நிகழ்ச்சியை முதலமைச்சர் தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து வேலம்மாள் குழும இல்ல திருமண நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். பின்னர், மதுரையில் அருங்காட்சியகப் பணிகளையும் தொடங்கி வைத்து, கலைஞர் நூலகத்தையும் பார்வையிடுகிறார். அதன் பிறகு முதலமைச்சர் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

தங்கம் விலை  ரூ.112 அதிகரிப்பு

சென்னை, செப்.6- தங்கம் விலை கடந்த சில நாட்க ளாக ஏற்ற இறக்கமாக காணப்படு கிறது. இந்த நிலையில் செவ்வாயன்று (செப்.6) சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.38 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை கடந்த 31 ஆம்  தேதி சவரன் ரூ.38,032-க்கு விற்பனை யானது. இந்த நிலையில் தங்கம் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தொட்டுள்ளது. இதேபோல் வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. கிரா முக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ.59-க்கு  விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி  ரூ.59 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. 

நீதிமன்றத்தில் ரவுடியைக் கொல்ல முயற்சி: பாதுகாப்பு தீவிரம்

சென்னை, செப்.6- சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பிரபல ரவுடி மதுரை பாலாவை திங்களன்று(செப்.5) வழக்கிற்காக காவலர்கள் அழைத்து வந்த போது ஐந்து பேர் கொண்ட கும்பல் கத்தியுடன் பாய்ந்து கொல்ல முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்கள் உட்பட காவலர்கள் அந்த கும்பலை மடக்கிப் பிடித்தனர். இதனால் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உதவி ஆணையர் தலைமையில் கூடுதல் பாதுகாப்பு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சைதாபேட்டை நீதிமன்றத்திற்கு வழக்கிற்காக வரும் நபர்களின் பெயர், விவரங்கள் உள்ளிட்டவையோடு உடைமைகள் பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். நீதிமன்றத்தின் இரண்டு நுழைவு வாயில்களிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சிறையிலிருந்து வழக்கிற்காக குற்றவாளி களை அழைத்து வரும் காவல்துறை யினரின் வாகனம் காவல் துறையினர் கண்காணிப்பு உள்ள பகுதிகளில் நிறுத்த  வேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

கியூப சர்வதேச உறவுகளில் முன்னேற்றம் அமெரிக்கத் தடைகள் தகர்கின்றன

ஹவானா, செப்.6- அமெரிக்காவின் தடைகளை மீறி உலக நாடுகளுடனான தனது உறவை வளர்த்தெடு ப்பதில் சோசலிச கியூப அரசு பெரும் வெற்றியடைந்துள்ளது. அண்மைக்காலங்களில் சீனா, ரஷ்யா, ஈரான், தென் அமெரிக்க நாடுகள், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுடன் பல்வேறு துறை களில் கியூபாவின் சார்பில் புதிய  ஒத்துழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள் ளன.  வெனிசுலா போன்ற சில நாடுகளுட னான உறவு ஏற்கனவே பலம் பொருந்திய தாகவே இருந்து வருகிறது. மெக்சிகோ வில் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, கியூபாவுடனான உறவு புதுப்பிக்கப் பட்டுள்ளது. அண்மையில் கியூபாவின் மேற்குப் பகுதியில் உள்ள மடான்சாஸ் நகரில் ஏற்பட்ட பெருந்தீ விபத்து பெரும் கலக்க த்தை ஏற்படுத்தியது. மின்னலால் உரு வான இந்த விபத்திலிருந்து மீள்வதற் கான நிவாரணப் பணிகளில் வெனிசுலா வும், மெக்சிகோவும் பெரும் பங்கு செலுத்தி யுள்ளன. பெருந்தீயை ஐந்து நாட்களில் அணைப்பதற்கும் இந்த இரண்டு நாடுகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருந்தது.  சீனா, ரஷ்யா, ஈரான், சிலி, அர்ஜெண்டி னா, பெரு, கொலம்பியா உள்ளிட்ட நாடு களுடனான கியூப உறவு பலப்படுத்தப் பட்டுள்ளது. இந்த முன்னேற்றத்திற்குப் பிறகு, கியூபாவின் கவனம் தென் கிழக்கு ஆசிய நாடுகளை நோக்கித் திரும்பியிருக்  கிறது. கம்போடியாவுக்கு பயணம் மேற்கொ ண்டுள்ள கியூபாவின் வெளியுறவுத்துறை துணையமைச்சர் ஜெரார்டோ பெனால்வர் போர்ட்டல் பல்வேறு துறைகளில் ஒத்து ழைப்பு பற்றி விவாதித்துள்ளார். மேலும், பிற “ஆசியன்” நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதற்கு கம்போடியாவின் துணையை கியூபா நாடியுள்ளது. அந்தப் பணியை மேற்கொள்ள நாங்கள் தயார் என்று கம்போடியா குறிப்பிட்டிருக்கிறது.
 

;