states

img

ஒன்றிய அரசின் பிரீப்பெய்டு மின் மீட்டர்

புதுச்சேரி,அக்.31- பிரீப்பெய்டு மின் மீட்டர் கொண்டு வரும் ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து நாடு தழுவிய அளவில் போரா ட்டங்கள் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கூறினார். புதுச்சேரியில் செவ்வாய் கிழமை (அக்.31) செய்தி யாளர்களை சந்தித்த சிபிஎம் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கூறிய தாவது:- புதுச்சேரியில் காலம் தாழ்ந்த மருத்துவ மாணவர் சேர்க்கையால் 400க்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறி யாகியுள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளது. இதற்கு மாநில முதல்வரும், அரசு நிர்வாகமும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த முறைகேடு தொடர் பாக நீதி விசாரணை நடத்த வேண்டும்.  பெண் அமைச்சர் ராஜி னாமா செய்த போது, சில குற்றச்சாட்டுகளை தெரி வித்துள்ளார். இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும் அல்லது மாநில மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

தொடர் இயக்கம்
புதுச்சேரியில் மூடப்பட்ட ரேசன் கடைகளை திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே தொடர்ந்து இயக்கத்தை நடத்தி வரு கிறது.  புதுவை பொறியியல் கல்லூரி தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் போதிய பேரா சிரியர்கள் நியமிக்கப் படவில்லை. எனவே, புதுவை அரசு தேவையான பேராசிரியர்கள் நியமிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.  73வது அரசியல் சட்டத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரு அரசியல் சட்ட அந்தஸ்து கொடுக்கப்பட்டது. ஆனால், புதுவையில் 2006க்கு பிறகு  உள்ளாட்சி தேர்தல் நடத்த ப்படவில்லை. உடனே உள்ளாட்சி தேர்தல் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியா கூட்டணி
மாநிலத்துக்கு மாநிலம் அரசியல் நிலைமையில் வித்தியாசம் இருக்கிறது. மத்திய பிரதேசம், சத்தீஸ் கர், ராஜஸ்தான், தெலுங் ்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறும். பாஜகவை வீழ்த்துவது தான் இந்தியா கூட்டணியின் பிரதான நோக்கமாகும். பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணியை உரு வாக்கியதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடதுசாரிகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது. மின் துறையை தனி யாரிடம் ஒப்படைக்கும் வகையில்  தற்போது உள்ள மின் மீட்டர்களை முழு வதும் அகற்றிவிட்டு பிரிப் பெய்டு கட்டண முறை தனி யார் மூலம் நிர்மாணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மின் கட்டணத்தை அதிகமாக உயர்த்தும் வகை யில் ஒரு நாள் மின்சார பயன்பாட்டுக்கு 3 வகையில் கட்டணம் நிர்ணயிக்க உள்ளனர். இதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. எனவே நாடு முழுவதும் ப்ரீ பெய்டு மீட்டர் நிர்மா ணிப்பது எதிர்த்து இயக்கம் நடத்துவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு முடிவு செய்து ள்ளது. மேலும், மின் கட்ட ணத்தை அதிகமாக உயர்த்தும் வகையில் ஒரு நாள் மின்சார பயன் பாட்டுக்கு 3 வகையில் கட்ட ணம் நிர்ணயிக்க உள்ள னர். இதில் பல்வேறு குளறு படிகள் உள்ளது. எனவே நாடு முழுவதும் ப்ரீபெய்டு மீட்டர் நிர்மாணிப்பது எதிர்த்து இயக்கம் நடத்து வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்திய குழு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பின் போது மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம், மாநில செயற் குழு உறுப்பினர்கள் வெ. பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், கொளஞ்சி யப்பன், பிரபுராஜ், சத்யா ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக  மார்க்சிஸ்ட் கம்யூனி