states

திமுக எம்எல்ஏ பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு

கடலூர்,ஜூலை 10- கடலூர் அருகே நல்லாத்தூரில் சட்டமன்ற திமுக உறுப்பினர் கோ. ஐயப்பன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு  வீசப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடலூர் - புதுச்சேரி எல்லையில் தமிழ்நாடு பகுதியில் நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். திமுக நிர்வாகி. இவருடைய மகள் மஞ்சள் நீராட்டு  விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை.9)  நல்லாத்தூரில் உள்ள ஒரு திருமண  மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக கடலூர் திமுக எம்எல்ஏ ஐயப்பன்,  திமுக நிர்வாகிகளுடன் இரவு  சுமார் 9. 30 மணிக்கு திருமண மண்ட பத்திற்கு காரில் சென்றார். அப்போது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சாலையில் இருந்து பீர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தீ வைத்து தூக்கி  உள்ளே வீசி விட்டு சென்றனர்.  

இந்த பாட்டில் பறந்து வந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்காக நின்று  கொண்டிருந்த ஒருவர் மீது விழுந்து  தரையில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் நாலாபுறமும் அலறியடித்து ஓடினர். இதில் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லை. இதுபற்றி அறிந்த ஐயப்பன் எம்எல்ஏ. உடனடியாக வெளியே வந்து நடந்த சம்பவம்  பற்றி கேட்டறிந்தார். மேலும் ஐயப்பன் எம்எல்ஏ-வை உடனடி யாக அங்கிருந்தவர்கள் பாதுகாப் பாக வீட்டுக்கு அனுப்பி வைத்த னர். இந்த சம்பவம் குறித்து அறிந்த தும் கடலூர் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ராஜாராம் மற்றும் காவலர்கள் சம்பவ இடத் திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது, பீர் பாட்டில் மண் ணெண்ணெய் பெட்ரோல் கலந்து வீசி இருப்பது தெரிந்தது. தொடர்ந்து அங்கிருந்த பொது மக்களிடம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான காவலர் கள் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் திங்களன்று (ஜூலை  10) இந்த சம்பவத்தில் ஈடுபட்ட  குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடலூரில் உள்ள எம்எல்ஏ ஐயப்பன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து 2 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்ற னர்.