நாமக்கல், ஆக. 8 - திருப்பூர் குருநாதர் தெருவில் வசித்து வருபவர் கேசவராவ் (58). இவர், 2018 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், கோயம்புத்தூ ரில் ஞானாலயா வள்ளுவர் கோட்டம் என்ற பெயரில் ஆசிரமம் வைத்துள்ள திரு ஞானந்தாசாமி (57) அவர்களை சந்தித்து ஆன்மீக பணிகளை செய்து வந்தேன். இந்நிலையில், வடலூர் அருகே ஆசிரமம் அமைக்க இடம் வாங்குவதற்கு உள்ளிட்ட செலவுகளுக்காக, திருப்பூர் கிளை தலைவரும் செயலாளரும் என்னிடம் ரூ.3 லட்சத்து 35 ஆயிரம் சில தவணைகளில் பெற்றார்கள். இதனையடுத்து, வட லூரில் இடம் வாங்கிய ஆவணத்தை காட்டு மாறு கேட்டபோது அவர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை. மேலும், ஆசிர மத்துக்கு வருபவர்களிடம் பணம் வசூலிப்பதையே அவர்கள் நோக்கமாகக் கொண்டிருந்தது தெரியவந்தது. தாம் செலுத்திய பணத்தையும் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூபாய் 2 லட்சத்தையும் திருஞானந்தாசாமி மற்றும் திருப்பூர் கிளை தலைவர், செயலாளர் ஆகியோர் வழங்க வேண்டும் என்று அவர் வழக்கு தொடுத்திருந்தார். இவ்வழக்கு, விரைவான விசாரணை க்கு கடந்த 2022 ஜூலை மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் தீர்ப்பை செவ்வா யன்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ், உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர் வழங்கினர். இதில், தனிநபர் அல்லது தனியார் அறக்கட்ட ளைகள் நடத்தும் ஆன்மீக மையங்களு க்கு செல்லும்போது, அந்த இடங்களில் கூறப்படும் தல வரலாறு உண்மையா? அங்குள்ள சாமியார் என கூறப்படுபவர் அல்லது அங்கு சாமியார் ஒருவர் இருந்த தாக கூறப்படுவது குறித்த சங்கதிகள் உண்மையா? அறிவியல் பூர்வமாக சரி யானதா?
என்பதற்கான பதில்களை அறிந்து கொள்ளாமல் 10 ஆண்டுகள் ஒரு ஆசிரமத்தின் பக்தராக இருந்து விட்டு திடீரென ஆசிரமம் பணத்தை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது என்று பயிற்சிக்காகவும் நன்கொடை யாகவும்பணம் செலுத்தியதற்கு ரசீதுகள் எதுவும் இல்லாமல் வழக்கு தாக்கல் செய்துள்ளது ஏற்புடையதல்ல. ஆசிரம நிர்வாகிகள் தாக்கல் செய்துள்ள பதிலில், வழக்கு தாக்கல் செய்தவர் தங்கள் கொள்கைகளை பின் பற்றுவோர் அல்ல என்றும் தங்களுக்கு நன்கொடை கொடுத்ததில்லை என்றும், திருப்பூர் கிளை தலைவர் மற்றும் செய லாளராக இருப்பவர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து உடையவர்கள் என்றும் கூறிவிட்டு, கொள்கைகளை பின்பற்றாத கேசவராவ் தலைவர் பதவி கேட்டதும் திருஞானந்தா சாமிகள் அப்படி யே ஆகட்டும் என்று கூறியுள்ளதும் அவர் பணியை விட்டு விட்டுச் சென்றதால் அவர் வரும் வரை ஏற்கனவே இருந்தவர்கள் பார்க்கட்டும் எனக் கூறியதாகவும் ஆசிர மம் பதிலில் தெரிவித்திருப்பது நம்பும்படி யாக இல்லை. பயிற்சிக்காகவும் நன்கொடையாக வும் பணம் கொடுத்ததற்கு ஆதாரம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்வ தோடு நீதிமன்றத்தின் நேரத்தையும் மனித உழைப்பையும் வீணடித்ததற்காக அபராதமாக ரூபாய் 10 ஆயிரம் வழக் கை தாக்கல் செய்த கேசவ ராவ் நான்கு வார காலத்துக்குள் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.