திருப்பூர், ஜூலை 26- ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளை கைவிட வலியுறுத்தி ஆகஸ்டு 9ஆம் தேதி சென்னை யில் நடைபெறும் அனைத்து தொழிற் சங்கங்களின் பெருந்திரள் அமர்வு போராட்டத்தில் பஞ்சாலைத் தொழிலா ளர்களை பெருந்திரளாக பங்கேற்கச்செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனத்தின் விரிவடைந்த மாநிலக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் எம்.சந்திரன் தலை மையில் நடைபெற்றது. இதில் சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர். கருமலை யான், மாநில பொதுச் செயலாளர் எம்.அசோ கன் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பஞ்சாலைத் தொழிலில் பணிபுரியும் பயிற்சியாளர்களுக்கு, தமிழக அரசு அரசாணைப்படி குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூ. 512 வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதிய நிர்ணயக் குழு ரூ.26 ஆயிரத்துக்கு குறைவில்லாமல் மாத ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.
அனைத்து தொழிலாளர்களுக்கும் பி.எஃப்., இஎஸ்ஐ, பிடிக்கப்படுவதுடன் அடையாள அட்டை, கணக்கு விபரங்களையும் கொடுக்க வேண்டும். அடிப்படை வேலை நேரம் 8 மணி நேரம் என்பதை உறுதி செய்ய வேண்டும். கூடுதல் பணிக்கு சட்டப்படி இரட்டிப்புச் சம்பளம் வழங்க வேண்டும். இபிஎப் ஓய்வூதியம் பெறுகிற பஞ்சாலை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் ரூபாய் 9000 வழங்கிட வேண்டும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட தேசிய பஞ்சாலைகளை (என்டிசி) வறுமைக்கு தள்ளப்பட்ட தொழி லாளர்களின் வாழ்நிலையை கவனத்தில் கொண்டு மீண்டும் இயக்க வேண்டும். சட்டப்படி தொழிலாளர்களை பணி நிரந்த ரம் செய்ய வேண்டும். நிரந்தர தொழிலா ளர்களை வெளியேற்றுவது, ஒப்பந்த தொழி லாளர் முறையை புகுத்துவது, வெளி மாநி லத் தொழிலாளர்களை வரவழைத்து கொத்த டிமை போல் வேலை வாங்குவது போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கைவிட வேண்டும். தொழிலாளர்களின் நலன், உரிமைகள் காக்கப்பட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், சென்னையில் ஆகஸ்ட் 9 அன்று நடைபெறும் அனைத்து தொழிற்சங்க பெருந்திரள் அமர்வு போராட்டத்திலும், ஆகஸ்ட் 14ஆம் தேதி விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிற்சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் நடத்துகின்ற “விடியலை நோக்கி இந்தியா” இயக்கத்தி லும் பஞ்சாலைத் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்பது என்று தீர்மானிக்கப்பட்டது.