சென்னை,அக்.20- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பை எடப்பாடி பழனிசாமி நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலக தயார் என கூறிய ஓ.பன்னீர்செல்வம், அதை நிரூபிக்க தவறினால் எடப்பாடி பழனிசாமி அரசியலை விட்டு விலகத் தயாரா? என்றும் கேள்வி எழுப்பினார். சென்னை விமான நிலையத்தில் வியாழனன்று(அக்.20) செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்,“முதலமைச்சரு டன் ஒரு மணி நேரம் பேசியதாக என்னு டன் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பழனி சாமிக்கு சவால் விட்டு உள்ளனர். முத லமைச்சரை நான் சந்தித்ததை பழனிசாமி நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார். நிரூபிக்கவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமி பதவி விலகத் தயாரா என்று கேட்டார். நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் என்னை பற்றி ஏதாவது விமர்சனம் செய்திருந்தால் கேள்வி கேளுங்கள் பதில் சொல்கிறேன் என்றும் எடப்பாடி பழனிசாமி நடத்திய போராட்டம் எனக்கு எதிரானதாக கருதவில்லை என்றும் அவர் கூறினார். சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘‘அதிமுக தொண்டர்கள் உரு வாக்கிய இயக்கம். யார் கட்சிக்குள் விருப்பத்தகாத பிரச்சனைகளை உருவாக்கு கிறார்கள் என்பது தொண்டர்களுக்கும், மக்களுக்கும் தெரியும். மற்றவர்கள் மீது பழிபோடுவது ஏற்புடையது அல்ல. ஊர்ந்து சென்று பதவிகளை வாங்கியது யார் என்றும், நம்பிக்கை துரோகம் செய்தது யார் என்றும் மக்களுக்கும், அரசியல் தெரிந்தவர்களுக்கும் தெரியும். என்னைப் பற்றி தொண்டர்களுக்கு தெரியும். அதிமுக இணையும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். விரைவில் தொண்டர்களை சந்திப்பேன்” என்றார்.