states

கியூபாவில் பிரம்மாண்ட அருங்காட்சியகம் திறப்பு

ஹவானா,டிச.2- புரட்சியாளரும் கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதியு மான மறைந்த பிடல் காஸ்ட்ரோவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தலைநகர் ஹவானாவில் பிரம்மாண்ட அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் கால் பரிசளிக்கப்பட்ட காஸ்ட்ரோவின் மார்பளவு சிலை, அவர் அணிந்திருந்த ராணுவ சீருடை, வலம் வந்த ஜீப் என காஸ்ட்ரோ பயன்படுத்திய ஏராள மானப் பொருட்களும், புகைப்படங்களும் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. மேலும் காஸ்ட்ரோ ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ தத்துவம் குறித்தும்,  அவரது சிந்தனைகளை விளக்கும் விதமாகத் திறந்த வெளி அரங்கம், பிரம்மாண்ட நூலகம் மற்றும் புத்தக கடை அமைக்கப்பட்டுள்ளது.

;