தூத்துக்குடி, மே 12- தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி லிமிடெட் ஒரு தலைசிறந்த ஷெட்யூல்டு கமர்சியல் வங்கி, பங்குச் சந்தை களில் தனது பங்கினை பட்டிய லிட்டதை அடுத்து தனது தொலை நோக்குப்பார்வையாக மீண்டும் இந்தியா முழுவதுமான விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தனது 531 வது கிளையை தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் சிஆர்எம் வசதியுடன் வியாழனன்று காலை 11 மணிக்கு துவங்கியுள்ளது. ஏஆர்கேஏ கருத்தப்பாண்டியர் (பரம்பரை அக்தார், ஸ்ரீசேர்மன் அரு ணாச்சலசாமி திருக்கோவில், ஏரல்), வங்கியின் பொது மேலாளர் பி.சூரியராஜ் முன்னிலையில் இந்த கிளையை திறந்து வைத்தார். வங்கி யின் ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு இந்த விழாவினை சிறப்பித்தார்கள். வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் விளக்கியதாவது: பங்குச் சந்தைகளில் பட்டியலிட்ட பிறகு வங்கியானது
அதன் நாடு முழு வதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் வேகம் காட்டும் விதமாக தனது செயல்பாடுகளை செய்து வருகிறது. அதன் துவக்கமாக வியாழனன்று தமிழகத்தில் 531ஆவது கிளையைத் திறந்திருக்கிறோம். (இந்த நிதியாண் டின் முதலாவதுபுதிய கிளை). மேலும் இன்னும் அதிகமான கிளைகளை இந்தியா முழுவதும் திறந்திட திட்ட மிட்டிருக்கிறோம். வங்கி மீண்டும் ஈடுபட்டு வரும் தனது விரிவாக்கச் செயல்பாடுகளில், இன்று இந்த புதிய கிளை துவக்க விழாவின் மகிழ்ச்சி யினை வங்கியின் அனைத்து உடை மைதாரர்களுக்கும் பகிர்ந்து கொள் வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார். தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி லிமிடெட் (டிஎம்பி) ஒரு பெயர் பெற்ற பழைய தனியார் துறை வங்கியாகும். தூத்துக்குடியில் தலைமை அலுவலகம் கொண்ட இந்த வங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறை களிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருவதோடு, தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. இந்த வங்கி யானது, இந்தியா முழுவதிலும் 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங் களில் 530 கிளைகள், 12 மண்டல அலு வலகங்களின் மூலம் சுமார் 50 லட் சத்துக்கும் மேலான வாடிக்கை யாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது.