states

பாஜக ஆட்சியில் மணிக்கு ஒரு விவசாயி தற்கொலை

புதுதில்லி, செப்.20- இந்தியாவில் விவசாயி களின் தற்கொலைகள் அதிகரித்து இருப்ப தாகவும், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள் வதாகவும் காங்கிரஸ் செய்தித்  தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினடே குற்றம் சாட்டியுள்ளார். கடந்த செப்டம்பர் 17  அன்று புனேவைச் சேர்ந்த  விவசாயி ஒருவர், தனது  வெங்காயத்திற்கு குறைந்த பட்ச ஆதரவு விலை கிடைக்  காததால் தற்கொலை செய்து  கொண்டார். இந்த தற்  கொலை நிகழ்வு தொடர்பாக சுப்ரியா ஷ்னரிடே செவ்வா யன்று செய்தியாளர்களிடம் பேசினார். சுப்ரியா பேசும்போது, “தற்கொலை செய்து கொண்ட விவசாயி தனது தற்கொலைக் குறிப்பில், தனது மரணத்திற்கு பாஜக அரசின் கொள்கைகளே காரணம் என்று தெரிவித்துள் ளார். பிரதமர் நரேந்திர மோடி  தன்னைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டு இருப்ப தாகவும் அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார். 2021-ஆம் ஆண்டில் விவ சாயிகள் 10 ஆயிரத்து 881  பேர் தற்கொலையால் இறந்  துள்ளனர். இது கடந்த ஆண்டு நடந்த 1 லட்சத்து 64 ஆயி ரத்து 33 தற்கொலை இறப்பு களில் 6.6 சதவிகிதம் ஆகும். அதாவது ஒவ்வொரு நாளும்  30 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒவ்  வொரு மணி நேரத்திற்கும்  ஒன்றுக்கு மேற்பட்ட விவ சாயிகள் இறக்கின்றனர். தேசிய குற்றப் பதிவுப் பணியகத் தரவுகளின் படி, ஒன்றிய பாஜக அரசு ஆட்சிக்கு  வந்த 2014 முதல் 2021 வரை 53 ஆயிரத்து 881-க்கும் மேற்  பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது ஒவ்வொரு நாளும் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுப்ரியா கூறியுள் ளார்.

;