கடலூர்,ஜூலை 26- சாகுபடி நெற் பயிரை அழிக்கும் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நட வடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்க விரி வாக்க பணிக்காக கத்தாழை, கரி வெட்டி மேல் வளையமாதேவி, கீழ் வளைய மாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங் களில் என்எல்சி நிர்வாகம் விவசாயி களின் விளை நிலங்களை கையகப் படுத்தி இழப்பீடு வழங்கியுள்ளது. இதில் இழப்பீடு முழுமையாக வழங்க வில்லை. இதனால் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி கள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், ஜூலை 25 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், என்எல்சி நிர்வாகம், விவசாயிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த நிலையில், வளையமாதேவி பகுதியில் பரவனாறு விரிவாக்கம் வாய்க்கால் வெட்டும் பணிக்கு என்எல்சி இந்தியா நிறுவனம் 30-க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் இயந்திரங்கள் மூலம். 1.5 கி.மீ தூரத்திற்கு நெற்பயிர்களை அழித்து வாய்க்கால் வெட்டி அணை போடும் பணியை துவக்கியது. இது குறித்து கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:- கடலூர் மாவட்டத்தில், நில எடுப்பு என்ற பெயரில் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை காது கொடுத்து கேட்காமல், மறுவாழ்வு, மறுசீரமைப்பு திட்டங்களை நிறை வேற்றாமல், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தொடர்ந்து என்எல்சி நிர்வாகம் விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. விளை நிலங்களில் தற்போது சாகுபடி செய்திருக்கும் நெற்பயிர்களை அழித்து, வாய்க்கால் வெட்டுகின்ற என்எல்சி இந்தியா நிறுவனத்தின் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆயிரக்கணக்கில் காவலர்களை துணைக்கு அழைத்து கொண்டு பொதுமக்களை போராடவிடாமல் முடக்கியும், விவசாயிகளை அச்சுறுத்தி யும் விவசாயத்தையும் அழிக்கும் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனிதாபி மானமற்ற இந்த செயலுக்கு துணை போகும் காவல் துறை நடவடிக்கையை கண்டிக்கிறோம். விவசாய பயிர்களை அறுவடை செய்வதற்கு கால அவகாசம் வழங்கி விவசாயிகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக் கிறார்.