states

இந்தியா கூட்டணியின் விளம்பரதாரரே மோடிதான் : மு.க. ஸ்டாலின்

“ஒற்றுமையாக இருந்து பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என முதல் கூட்டத்தில் முடிவு செய்தோம். தற்போது இந்தியா கூட்டணி வலிமைமிக்கது என்று நிரூபித்துள்ளோம். இந்த கூட்டத்தை பொறுத்தவரை இது திருப்திகரமான கூட்டமாக மட்டுமில்லாமல் திருப்புமுனை கூட்டமாக அமைந்திருக்கிறது. அண்மையில் 7 லட்சம் கோடி ரூபாய் தொடர்பாக சிஏஜி அறிக்கை கொடுத்திருக்கும் விவரம் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதுபற்றி பிரதமர் மோடி அவர்கள் வாய் திறந்து பதில் சொல்லவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு இல்லை. தேர்தல் ஆணையத்திற்கும் சுதந்திரம் கிடையாது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகிய அமைப்புகளை அரசியல் எதிரிகளை எல்லாம் அச்சுறுத்துகிற ஏவல் அமைப்புகளாக பாஜக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. தனித்தனியாக கட்சிகளாக இருந்தாலும், நாட்டை காப்பாற்ற நாம் ஒன்று சேர்த்திருக்கிறோம். பாஜக ஆட்சியின் முடிவுக்கு கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது. பாஜக அரசின் சாதனைகளாக எடுத்துக் கூற பிரதமர் மோடிக்கு எதுவும் இல்லை. அதனால், ‘இந்தியா’ கூட்டணியை விமர்சித்துப் பேசி வருகிறார் பிரதமர் மோடி. ‘இந்தியா’ கூட்டணியின் சிறந்த விளம்பரதாரராக பிரதமர் மோடி செயல்படுகிறார். அவருக்கு என் நன்றி”

மும்பை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்