சென்னை, டிச.3- டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை ஏன் குறைக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் பிற்பகல் 2 மணி முதல் 8 மணிவரை மட்டுமே என்று முடிவு செய்து திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள வாக்குறுதி யின்படி விற்பனை நேரத்தை குறைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இது குறித்து சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.கார்த்திக், மாநில செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் ஆண்டுதோறும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரித்து வருகின்றது. கடந்த ஆண்டு மட்டும் 11 சதவீதம் விற்பனை உயர்ந்துள்ளது. இதன் அர்த்தம் என்னவெனில் குடிநோயாளிகள் அதி கம் குடித்து கெட்டுப்போகிறார்கள் மற்றும் புதிய குடிநோயாளிகள் உரு வாகி வருகின்றார்கள் என்பதே ஆகும். இதில் பெரும்பாலும் மாண வர்கள் மற்றும் இளைஞர்களே அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மதுபான விற்பனை, வருமானம் பெருகுவதற்கு கொடுக்கும் முக்கி யத்துவத்தை விட குடிநோயிலிருந்து தமிழக மக்களை மீட்பதற்கே தமிழக அரசு முக்கியத்துவம் தர வேண்டும். ஆகவே உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள வகையில் விற்பனை துவங்கும் நேரத்தை நண்பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 2 மணிக்கும், கடை மூடும் நேரத்தை 10 மணியிலிருந்து 8 மணியாகவும் குறைத்திட வேண்டும். விற்பனை நேரம் குறைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறு தியை அமலாக்கிட திமுக அரசு முன்வர வேண்டும்.
21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபான விற்பனை செய்யக் கூடாது என்று அரசு அறிவுறுத்தியிருந்தாலும் அது மீறப்படுகிறது. விற்பனை நேரம் தவிர 24 மணிநேரமும் கள்ளச் சந்தையில் மதுபான விற்பனை நடந்து வருகிறது. இது தடுக்கப்பட்டு விற்பனை ஒழுங்கு படுத்தப்பட வேண்டும். மதுக்கடைகளை கடந்து செல்கிற பொது மக்கள் முகம்சுழிக்கும் வகையில் ஏராளமான சம்பவங்கள் நடை பெற்று வருவதால் கடைகளில் தேவையான அளவு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். குடியிருப்புகள், கல்வி நிலையங்கள், மார்க்கெட்டுகள், மதவழிபாட்டு தலங்கள் அருகிலுள்ள மதுபானக் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மதுபான விற்பனையை விட மது ஒழிப்பே அரசின் பணியாக இருக்க வேண்டும். மதுபானக்கடை எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட வேண்டும். சட்டமன்ற தொகுதிக்கு ஒரு குடிநோய் ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு மையம் துவங்கப்பட வேண்டும். மதுக்கடை வருவோருக்கு குடிநோய் ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு மையங்களின் முகவரியுடன் கூடிய விழிப்புணர்வு துண்டு பிரசு ரங்கள் விநியோகிக்க அரசு உத்தரவிட வேண்டும். மேற்கண்ட வற்றை நடைமுறைப்படுத்தி தமிழகத்தை குடி நோயிலிருந்து மீட்க தமிழக அரசு தீவிர முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.