states

மணிப்பூர் வெடிகுண்டு வழக்கு: என்.ஐ.ஏவுக்கு மாற்றம்

இம்பால், ஜூன் 25 - மணிப்பூர் பால குண்டுவெடிப்பு வழக்கு என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டுள்ளது. தேச பாதுகாப்பை முன்னிட்டே இந்த வழக்கு என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மணிப்பூரில் கடந்த ஜூன் 21 அன்று இரவு 7 மணியளவில் தித்திம் சாலையில் பவுகாக்சான் இகாய் அவாங் லெய்காய் மற்றும் வாக்த ஆகிய பகுதிகளை அடுத்த பாலம் ஒன்றில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. ஸ்கார்பியோ ரக நான்கு சக்கர வாகனம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த அந்த வெடி குண்டு வெடித்து, பாலத்தின் மேற்கு பகு தியில் சில இடங்கள் கடுமையாக சேத மடைந்தன. 3 சிறுவர்களுக்கு லேசான அளவில் காயம் ஏற்பட்டது. அவர்கள் உட னடியாக மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர் பாக பவுகாக்சான் இகாய் காவல்நிலையத் தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் (IPC), வெடிக் கும் பொருள்கள் சட்டம் மற்றும் பிடிபிபி சட்டம் 1984 தொடர்புடைய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முதற்கட்ட விசா ரணையின்படி, குண்டு வெடித்த வாக னம் சுராசந்த்பூர் பகுதியில் இருந்து வந்துள்ளது என தெரியவந்தது. இந்நிலையில், மணிப்பூரில் மற்றும் அதனை சுற்றியுள்ள எல்லைப் பகுதி முழு வதும் ஊடுருவல்காரர்களின் தொடர்பு பெரிய அளவில் உள்ளது என சந்தேகிக்கப் படும் சூழலில், தேசப் பாதுகாப்பை முன்னி ட்டு இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டுள்ளது. மணிப்பூர் வன்முறை தொடர்பாக, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சனிக்கிழமையன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகே, மேற்கண்ட குண்டுவெடிப்பு வழக்கு என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டுள்ளது.