எம்.எஸ். சுவாமிநாதன் மறைவு: அறிவியல் இயக்கம் இரங்கல்
சென்னை, செப்.29- உலக அளவில் புகழ்பெற்ற விஞ்ஞானி, பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர், விவசா யம், சுற்றுச்சூழல், நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. இந்தியாவில் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்த நிலை மாறி, வேளாண் உற்பத்தி பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்கியவர். “பட்டினி இல்லாத இந்தியா தான் என் கனவு” என்பார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை 1988-ல் நிறுவி விவசாயத்தில் அறிவியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.சுப்ரமணி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
வறிய நிலை கலைமாமணிகளுக்கு ரூ.1 லட்சம் பொற்கிழி
சென்னை, செப்.29- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வெள்ளியன்று (செப்.29) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் நடந்த நிகழ்வில், வறுமையில் உள்ள 10 கலைமாமணி விரு தாளர்களுக்கு பொற்கிழியாக தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். அதேபோல், 500 கிராமியக் கலைஞர்களுக்கு இசைக் கருவிகள் மற்றும் ஆடை, அணிகலன்கள் வாங்க தலா ரூ. 10 ஆயிரம் நிதியுதவி வழங்கி டும் அடையாளமாக 5 கிராமியக் கலைஞர்களுக்கு நிதியுதவிக்கான காசோலைகளையும், நலிந்த நிலையில் வாழும் மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 1000 கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 நிதியுதவி வழங்கும் அடையாளமாக 4 கலைஞர்களுக்கு நிதியுதவிக்கான ஆணைகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரி யத்தின் தலைவர் வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.
தங்கம் விலை குறைந்தது
சென்னை, செப். 29 - தங்கத்தின் விலை சில தினங்களுக்கு முன்பு சவர னுக்கு 200 ரூபாய் குறைந் தது. வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.580 குறைந்து விற்பனையானது. கடந்த 10 நாட்களில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இரு மாநிலங்களும் நட்புறவுடன் நடந்து கொள்வது அவசியம்: துரைமுருகன்
சென்னை, செப்.29- தமிழ்நாடு-கர்நாடகா இரு மாநிலங்களும் நட்புறவுடன் நடந்து கொள்வது அவசியம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுரு கன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன் கூறுகை யில்,“கர்நாடகா திறந்த தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழ்நாட்டிற்கு போதுமான அளவிற்கு வந்து கொண்டிருக்கிறது எனக் கூற முடியாது”என்றார். ஆற்றின் கடைமடை பகுதிக்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற விதியை கர்நாடகா பின்பற்ற மறுக்கி றது. காவிரி நீர் திறப்பு தொடர்பான உத்தரவுகள் எதையும் கர்நாடகா பின்பற்றுவதில்லை. உச்சநீதிமன்ற உத்தரவை கூட கர்நாடகா மதிப் பதில்லை என்றும் அவர் கூறினார். கர்நாடக மாநில அணைகளில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருந்தும் அதை திறக்க மறுக்கி றார்கள். ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துடன் நட்புறவுடன் நடந்து கொள்வது அவசியம். நாம் அனை வரும் இந்தியர்கள் என்ற எண்ணம் இருக்க வேண்டும் எனவும் துரைமுரு கன் கேட்டுக்கொண்டார்.