ஓணம் பண்டிகையை கேரள மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் விதமாக கேரள மாநில விவசாயத்துறை சார்பாக மிகமிகக் குறைந்த விலையில் காய்கறிகள் மற்றும் பழவகைகளை விவசாயச் சந்தை விற்பனை நிலையங்கள் மூலமாக வழங்கி ஓணக் கொண்டாட்டத்தில் மக்களுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது கேரள அரசு. காய்கறிகள்-பழவகைகளை ஆகியவற்றை பொதுவிற்பனை விலையைவிட 10 முதல் 20 சதவீதம் வரை அதிகவிலைகொடுத்து விவசாயிகளிடமிருந்து வாங்கி 10 முதல் 30 சதவீதம் வரை குறைவான விலைக்கு பொது மக்களுக்கு வழங்கியுள்ளது. ஓணக்காலத்தில் 2010 பிரதேச விவசாயச் சந்தைகள் திறக்கப்பட்டன. விவசாயத்துறையின் சார்பாக 1350, தோட்டக்கலைத் துறையின் சார்பில் 500, பிஎஃப்பிஸி-ன் சார்பாக 160 என மொத்தம் 2010 விவசாய விளைபொருள் சந்தைகள் மூலம் விற்பனை நடைபெற்றன.