states

வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்

சென்னை, செப். 26- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர்  தொல்.திருமாவளவன் ஆகியோர் சென்னையில் திங்களன்று (செப்.26) செய்தியாளர்களை சந்தித்தனர். இந்துக்கள், இந்து அடிப்படைவாதி களைப் பிரித்து அடையாளப்படுத்த நீங்கள்  எடுத்த முயற்சி என்ன என்ற கேள்விக்கு,  ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகள்தான் இந்து அடிப்படைவாதிகள். இதற்கான பிரச்சாரத்தை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். அதனால்தான் பாஜக தலைவர் அண்ணாமலை காவல் துறையா நாங்களா பார்க்கிறோம் எனச் சவால் விடுத்துள்ளார். அமைதியான தமிழ கத்தில் வன்முறையைத் தூண்டுவதற்கா கவே ஆ.ராசா பேச்சை திரித்துக் கூறி வன்முறையில் ஈடுபடுகின்றனர்.

பாபர் மசூதி இடித்த போது கூட  தமிழகத்தில் வன்முறைகள் நடைபெற வில்லை. இவர்கள் அம்பேத்கர் நினைவு நாளில் மசூதியை இடித்தார்கள். இப்போது காந்தியைச் சுட்டுக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். கூட்டம் அவரது பிறந்தநாளில் 50 இடங்களில் அணிவகுப்பு நடத்தவிருப்பது, அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தில் வன்முறையை உருவாக்க முயல்கிறார்களோ என்ற அச்சம் எழுகிறது. ஏனென்றால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஒருவரே அன்மையில் மும்பை நீதி மன்றத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இளை ஞர்களைத் திரட்டி வெடிகுண்டு தயாரிப்பது எப்படி, வீசுவது எப்படி என்பது  குறித்து பயிற்சியளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களே இதுபோன்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதும் காவல்  துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.  தேர்தல் ஆதாயத்திற்காக இப்படிப் பட்ட சம்பவங்களை அரங்கேற்றி வரு கிறார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் அண்ணா சிலைக்குச் செருப்பு மாலை அணிவித்துள்ளனர். வி.சிக அறிவித்த பேரணி இந்துக் களுக்கு விரோதமானது  என அண்ணாமலை கூறுகிறாரே என்ற கேள்விக்கு,  நாங்கள் இந்துக்களுக்கு விரோதமான வர்கள் அல்ல. இந்து அடிப்படைவாதத் தைதான் எதிர்க்கிறோம். பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் ஆட்சியின் மூலம் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் இந்து அடிப்படைவாதிகள் இதுபோன்ற வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். அரசு யார் வன்முறையில் ஈடுபட்டாலும் அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றனர்.

;