states

img

முஸ்லிம் லீக் தலைவருக்கு பினராயி விஜயன் அறிவுரை உங்கள் தாய், சகோதரியை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!

கண்ணூர், டிச.14- கேரள அரசின் வக்பு வாரியக் கொள்கை யில் என் ஏழைத் தந்தையை ஏன் இழுக்கி றீர்கள்? என்றும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர், மரியாதை என்றால் என்ன என்பதை அவரின் தாய், சகோதரி யிடம் இருந்து கற்க வேண்டும் என்றும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் காட்டமாக கூறியுள்ளார். கேரள மாநில வக்பு வாரியத்திற்கான நிர்வாகிகளை நியமிக்க தங்களுக்கு உரிமை இருப்பதாக கேரள அரசுத் தேர்வாணையம் கூறியிருந்த நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் அப்துர் ரஹ்மான் கலாயி கோழிக்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது “கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா - முகமது ரியாஸ் திரு மணம் சட்டப்படி செல்லாது. இதைத் துணிச்ச லாகக் கூறுங்கள்” என்றும், “பினராயி விஜ யனின் தந்தை, கள் இறக்கும் தொழிலாளி. அவரின் மகனான பினராயி விஜயனுக்கு கேரளா ஒன்றும் திருமணச் சீர்வரிசையாக வழங்கப்படவில்லை” என்றும் தனிப்பட்ட முறையில் விமர்சித்தார். இந்நிலையிலேயே கண்ணூரில் நடந்த கூட்டத்தில், அப்துர் ரஹ்மான் கலாயி-க்கு முதல்வர் பினராயி விஜயன் பதிலளித்துள் ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“கேரள அரசின் வக்பு வாரியக் கொள்கை யில் என்னுடைய ஏழைத் தந்தையின் பெயரை ஏன் இழுக்கிறீர்கள்? எனப் புரிய வில்லை. நான் பள்ளியில் படிக்கும்போதே என் தந்தை இறந்துவிட்டார். அவரை அவ மானப்படுத்தாதீர்கள். உங்களுக்கு எதிராக என் தந்தை என்ன குற்றம் செய்தார். கள் இறக்கும் தொழிலாளியாக அவர் வேலை செய்தது குற்றமா? கள் இறக்கும் தொழிலாளியின் மகன் என்று பெருமையாகவே அடிக்கடி கூறி யிருக்கிறேன். கள் இறக்கும் தொழிலாளி யாக என் தந்தை வேலை செய்தது தவ றான செயலா? என் மகள் மற்றும் மருமகன் பற்றித் தவ றாகப் பேசுகிறார்கள். முதலில் இப்படி அநாக ரிகமாகப் பேசுவதை நிறுத்த வேண்டும். உங்கள் தாய், சகோதரியை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான கலாச்சாரம் என்பது குடும்பத்திலிருந்து துவங்குகிறது.” இவ்வாறு பினராயி விஜயன் குறிப் பிட்டுள்ளார்.

;