சென்னை, செப். 4- தமிழ்நாட்டில் முதன் முறையாக அமையவுள்ள வன விலங்குகளுக்கான மேம்பால பணிகள் துவங்கி யுள்ளன. தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பாக பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் என்எச் 744 (ஏ) என்ற மதுரை ரிங் ரோடு அமைக் கும் பணி, கடந்த 2018ஆ-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதற்கான பணிகள் தற்போது 80 விழுக்காடு நிறைவடைந்துள்ள நிலை யில், இந்த நெடுஞ்சாலை மதுரை வாடிப்பட்டியில் தொடங்கி அலங்காநல்லூர், பாலமேடு வழியாக திருச்சி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பாலமேடு அருகே வகுத்துமலையில் பாது காக்கப்பட்ட வனப்பகுதி யில் கரடி, மான், காட்டெ ருமை உள்ளிட்ட அரியவகை விலங்கினங்கள் உள்ளன. வனவிலங்குகளை காக்க இரண்டு மலைகளை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை செல்ல திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளதால், இந்த மலை யின் மேல் பகுதியில் சுமார் 210 மீட்டர் நீலத்தில் வன விலங்கு பாலம் அமைக்கும் வகையில் திட்டமிடப்பட்டு தேசிய நெடுஞ்சாலைத் துறை, மதுரை மாவட்ட வனத்துறைக்கு அனுமதி கோரி விண்ணப்பித் திருந்தது. இந்நிலையில், இந்த மனு தமிழ்நாடு வனத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு தற்போது அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து தற்போது அதற் கான பணிகள் துவங்கி யுள்ளன. இதற்காக வகுத்து மலைப் பகுதியில் மிகப்பெரிய இயந்திரங்கள் மூலம் வெடி வைத்து பாறை கள் அகற்றப்பட்டு வரு கின்றன. மேலும் பணிகள் 2024ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு, இந்த தேசிய நெடுஞ்சாலை பொது மக்க ளின் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.