states

தனியார் நிறுவனங்களின் சுரண்டலுக்கு வக்காலத்து வாங்கும் காஞ்சிபுரம் ஆட்சியர்

சென்னை, செப்.28- வடநாட்டவர், உள்ளூர்காரர் என்ற  முறையில் பாகுப்படுத்தி பேசும் காஞ்சி புரம் மாவட்ட ஆட்சியரின் பேச்சுக்கு சிஐடியு கண்டனம் தெரிவித்துள்ளது.  தமிழக அரசு உடனடியாக நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு அக்டோபர் 5 அன்று கண்டன இயக்கத்திற்கு சிஐடியு மாநில நிர்வாகக்குழு அழைப்பு விடுத் துள்ளது. காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவல கத்தில் செப்டம்பர் 22 அன்று நடந்த, மாவட்ட திட்டக்குழு  கூட்டத்தில், இக்  குழுவின் உறுப்பினர் ராமமூர்த்தி  மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை களில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு 20சதவிகிதம் வேலை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பேசியுள்ளார். இதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், “நம் ஆட்கள் குறைந்தபட்சம் ரூ .25  ஆயிரம் சம்பளம், வாரத்தில் இரண்டு  

நாள் விடுமுறை என அதிகப்படியான சம்பளம் கேட்கிறார்கள்.  வட நாட்ட வர்கள் ரூ.9 ஆயிரம்  சம்பளம் இருந்  தால் போதும் என பணி புரிவதாக தொழிற்சாலைகள்  தரப்பில்  கூறு கிறார்கள். ரூ.15 ஆயிரம் கொடுத்தால்  கூட   நம்மூர்காரர்கள்  வேலை செய்யத்  தயாராக இல்லை. நம்மாட்களிடம் வேலைக்குச் செல்வதற்கான ஒழுக்க மும் இல்லை.  “வேலை தேடும் நம்  உள்ளூர் ஆட்களின் மனநிலை இப்படி  இருந்தால் அவர்களுக்கு எவ்வாறு வேலை கிடைக்கும்” என எரிச்சலுட னும் ஆத்திரத்துடனும் பேசியது  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. மேற்கண்ட ஆட்சியரின் மன நிலையும் பேச்சும் முழுக்க தொழிலா ளருக்கு எதிரானதாக உள்ளது. தொழிற்சாலைகளில் வேலை நேரச்சட்டம் தொழிற்சாலைகள் சட்டம், குறைந்தபட்ச கூலி சட்டம்,  காண்ட்ராக்ட் ஒழிப்பு மற்றும் ஒழுங்கு படுத்துதல் சட்டம் போன்ற எந்த  சட்டமும் முறையாக அமல்படுத் தப்படுவதில்லை. அடுத்தடுத்து நிறைய விபத்துக்கள் நடைபெறு கிறது. இந்நிலையில், வடநாட்டவர், உள்ளூர்காரர் என்ற முறையில் பாகுப்படுத்தி பேசுவதும், குறைவான கூலி பெற்றுக் கொண்டால் தான்  வேலை கிடைக்கும் என்று கூறுவதும்  அரசியல் சட்டத்திற்கு விரோதமான தாகும். உள்ளூர் தொழிலாளர்கள் ஒழுக்கம் இல்லாதவர்கள் என பேசி யதற்கு ஆட்சியர் வருத்தம் தெரி விக்க வேண்டும். ஆட்சியருக்கு அந்த மாவட்டத்தில் தொழிற்சாலைகளில் உள்ள உண்மை நிலவரம் தெரிய வில்லை என்றே கருத வேண்டி உள்ளது.

தொழிலாளர்களுக்கும், தொழிற்  சங்கத்திற்கும் எதிரான நிலை எடுப்ப தன் மூலம் தொழில் அமைதி கெட்டுப் போக ஆட்சியரே காரணமாகி விடு வார். சட்டவிரோதமாக செயல்படுகிற முதலாளிகளை ஒழுங்குபடுத்த வேண்டும். இந்த நாட்டு சட்டங்களை மதிக்காத அந்நிய முதலாளிகளுக்கு வக்காலத்து வாங்குவது ஆட்சியரின் வேலையா? தொழிற்சங்க உரிமையும், கூட்டு பேர உரிமையும் அரசியல் சட்டம் வழங்கும் உரிமை. இவற்றை மறுக்கிற  முதலாளிகளை எதிர்த்து போராடி னால் ஆட்சியர் எந்த பக்கம் நிற்க  வேண்டும்?  இது போன்ற பிரச்சனை யில் காஞ்சிபுரம் ஆட்சியர்  சரியான நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை  இல்லை. எனவே,  தவறான அணுகுமுறை யை பகிரங்கமாக வெளிப்படுத்தி தனது மனநிலையை வெளிப்படுத்திய மாவட்ட ஆட்சியரை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கியத்துவம் கருதி,   இடம் மாறுதல் செய்ய வேண்டும்.  மேலும், தொழிலாளர் விரோத போக்கு டன், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்கள் அமைப்பதை தடுத்து, அதற்கு முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கருத்து தெரி வித்து வரும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை கண்டித்து வரும் அக்டோ பர் 5 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்க ளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என  ஒகேனக்கலில் கூடிய சிஐடியு மாநில நிர்வாகக்குழு முடிவெடுத்துள்ளது.