states

மது பரிமாறும் சிறப்பு உரிமம் தமிழக அரசின் திருத்தப்பட்ட விதிகளுக்கு இடைக்கால தடை

சென்னை, ஏப்.26- திருமண மண்டபங்கள், விருந்து மண்டபங்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்களில் மது பானங்கள் பரிமாற வசதியாக தமிழ் நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனு மதி) விதிகளில் திருத்தம் செய்து, தமிழ்நாடு அரசு சிறப்பு உரிமத்தை அறி முகப்படுத்தியுள்ளது. சிறப்பு உரிமம் பெற்றவர்கள் குறிப்பிடப்பட்ட இடத்தில் பொது நிகழ்ச்சி களில் விருந்தினர்கள், பார்வையா ளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு மதுபானம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த சிறப்பு உரிமம் குறித்த அறிவிப்பு, கடந்த 2023 மார்ச் மாதம் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையால் வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறி ஞர் பாலு, சென்னை உயர் நீதிமன்றத் தில் பொது நல வழக்கை தாக்கல் செய்தார். அந்த மனுவில், டாஸ்மாக் கடை களை பொறுத்தவரை தற்போது கல்வி  நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்க ளில் இருந்து குறிப்பிட்ட தொலை வில்தான் அமைக்க வேண்டும் என விதிகள் உள்ளன. இந்நிலையில், திரு மணம் போன்ற நிகழ்வுகள் பெரும் பாலும் குடியிருப்பு பகுதிகளில் நடை பெறும். இதனால் இந்த விதிகளை அனுமதித்தால், அது பொதுமக்களின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

பொதுமக்களின் நலனை கருத்தில்  கொள்ளாமல், உச்சநீதிமன்ற தீர்ப்  புக்கு முரணாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த திருத்த விதிகளுக்கு தடை விதிக்க  வேண்டும்.  அதை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் வைத்திய நாதன் மற்றும் கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் புதனன்று விசா ரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், “பொது இடங்களான திருமண மண்ட பங்கள் உள்ளிட்ட இடங்களில் மது பானம் பரிமாற வகை செய்யும் விதி கள் ரத்து செய்யப்பட்டு, சர்வதேச கருத்த ரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அதை எதிர்த்துதான் வழக்கு தொடர முடியும்” என்றார். அப்போது பாலு தரப்பில் ஆஜ ரான வழக்கறிஞர் எம்.ஆர்.ஜோதி மணியன், “பொது இடங்கள் மட்டு மின்றி, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மது பானம் வழங்கவும் தடை விதிக்க கோரி யுள்ளோம். புதிய திருத்தம் தொடர்பாக கூடுதல் மனு தாக்கல் செய்யப்படும்” என தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாறும் வகையில் உரிமம் வழங்கு வது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட னர். மேலும், இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசா ரணையை ஜூன் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.