சென்னை,மார்ச் 21- சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் அமைந்துள்ள ஜி-ஸ்கொயர் நிறு வனத்த்தின் தலைமை அலுவலகத்தில் வியாழனன்று (மார்ச் 21) காலை 7 மணி முதல் 10க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட னர். அதே போல் சென்னை கேஷ்சுரினா டிரைவ் சாலையில் உள்ள ஜி-கொயர் இயக்குநர் பாலா வீட்டில் இரண்டு வாக னத்தில் வந்த வருமான வரித்துறை அதி காரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் இந்நிறுவனத்திற்குத் தொடர்புடைய நீலாங் கரை, தரமணி, ஆழ்வார்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளிலும் வருமான வரித்துறையினர் காலை முதல் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த நிறுவனம் இதற்கு முன்னதாக பல முறை வருமானவரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாகக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமும் இந்த நிறுவனத் திற்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற் கொண்டனர். அப்போது பல்வேறு முக்கிய ஆவணங் களை அதிகாரிகள் கைப்பற்றி இருந்தனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் வரு மான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமான வரித் துறையின் பறக்கும் படை அதிகாரிகளும் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.மேலும் சென்னை தரமணியில் மென்பொருள் சப்ளை செய்யக்கூடிய நிறுவனம் ஒன்றிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதேபோல் அண்ணா நகர், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் வரு மானவரித்துறை அதிகாரிகள் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜி - ஸ்கொயர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை எண்ணிக்கை அதிகரிக்க வரு மான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு ள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் பணம் பட்டுவாடா, மறைக்கப்பட்ட வருவாய் உள்ளிட்ட தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.