states

img

சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம்

சென்னை, நவ. 19- தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 25 மணல் குவாரிகள் குறித்து, ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை ஒப்பந்த தாரர்களை வரவழைத்து, விவ ரங்களை சேகரித்து வருகிறது. சட்டவிரோதமாக வெட்டி யெடுக்கப்பட்ட மணல், மணல் விற்பனை பற்றிய விவ ரங்களை சேகரிக்க அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏற்கனவே நீர்வளத் துறையின் பொறி யாளர்களை விசாரித்தனர். விசா ரணைக்குள்ளான அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களை நோக்கி கை காட்டியதாகக் கூறப்படுகிறது. ஆற்றில் மணல் அள்ளுவதைப் பொறுத்த வரை மாவட்ட ஆட்சி யர்களே பொறுப்பான உயர் அதி காரி ஆவார். அமலாக்கத்துறை ஏற்கெனவே இந்த ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி பல்வேறு மணல் குவாரி களில் திடீர் சோதனைகளை நடத்தியது. சிசிடிவி தரவு சேமிப்பு சாதனங்கள், கணினி ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் போலி ரசீதுகள் மற்றும் போலி க்யூ.ஆர். குறியீடுகள் உள்ளிட்ட ஆவ ணங்களை கைப்பற்றியது. இது தொடர்பாக, மணல் அள்ளு தல் மற்றும் விற்பனையை கட்டுப்படுத்தி மேற்பார்வையிடும் நீர்வளத்துறைக்கு அம லாக்கத்துறை ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளது. தமிழநாடடில் குவாரிகளில் இருந்து மணல் அள்ளுவதை நீர் தேக்கத்துறைதான் கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தமிழகத்தில் ஆற்று மணல் அள்ளுதல் மற்றும் விற்பனை செய்ததில் முறைகேடுகள் நடந்த தாக எழுந்த புகார்கள் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக, அம லாக்கத்துறை தற்போது 10 மாவட்ட ஆட்சியர்களை விசாரணைக்கு அழைத்துள்ளது. அமலாக்கத்துறையால் விசா ரணைக்கு அழைக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் வரும் நாட்க ளில் விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.