states

மத்திய அரசு அனுமதித்தால் தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படும்

சென்னை,செப்.25- சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி போடும் பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.   இதனையடுத்து செய்தியா ளர்களிடம் பேசிய அமைச்சர், ‘ பூஸ்டர் தடுப்பூசி மத்திய அரசின் உத்தரவின்படி, வரும் 30ஆம் தேதி வரையில் போடப்படும். அதன் பின்னர் மத்திய அரசு அனுமதி அளித்தால் இலவசமாக போடப் படும். தமிழ்நாட்டில் இதுவரை 96.55 விழுக்காடு பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 91.39 விழுக்காடு பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். பூஸ்டர் தடுப்பூசி 30ஆம் தேதிக்குப்பின் பணம் செலுத்தி, தனியார் மருத்துவ மனைகளில் செலுத்தப்படுமா என்பது தெரியவில்லை என்ப தால், அடுத்த ஐந்து நாட்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் அனைத்து அரசு மருத்துவமனை களிலும் கர்ப்பிணிகள் முதல் 16  வயது வரை செலுத்தப்படும் கொரோ னா தடுப்பூசி உள்ளிட்ட 13 வகையான தடுப்பூசிகளும் போடப் படும்.

வியாழக்கிழமைகளில் 12 முதல் 17 வயதினருக்கான கொரோ னா தடுப்பூசி பள்ளிகளில் நேரில் சென்று செலுத்தப்படும். ஆனால், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்து வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத் துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மக்களிடையே சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 20.04 விழுக்காடு பேர், அதாவது 86,31,976 பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியைச்செலுத்தி யுள்ளனர். ‘மக்களைத்தேடி மருத்து வம் திட்டம்’ தொடங்கி வைக்கப்பட் டதைத் தொடர்ந்து, 90 லட்சமாவது பயனாளிக்கு இன்று மருந்து பெட்ட கம் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை 74 விழுக்காடு பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. சென்னையில் 40 விழுக்காடு பேருக்கு, இந்த திட்டத் தின் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப் பாக உயர் ரத்த அழுத்த நோயா ளிகள் 35 லட்சம் பேரும், நீரிழிவு நோய்க்கு 24 லட்சம் பேரும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் என இரு நோய்களும் பாதிக் கப்பட்ட 18 லட்சம் பேரும், பேலி யேட்டிவ் கேர் என்ற நோய் ஆதரவு நோயாளிகள் 3 லட்சம் பேரும், பிசி யோதெரபி நோயாளிகள் 7.85 லட்சம் பேரும், டயாலிசிஸ் சிகிச்சை யில் உள்ள 1,000 பேரும் பயனடைந்துள்ளனர். விரைவில் இந்த எண்ணிக்கை ஒரு கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

;