சென்னை, ஜூலை 6 - பிரதமராக இருந்த காலத்தில் மோடி இந்த நாட்டிற் காக எந்த நல்லதும் செய்யவில்லை என்று பாஜக-வின் மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். எதிர்க்கட்சி கள் ஒற்றுமையாக செயல்பட்டால், 2024-இல் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார். சென்னை மற்றும் மதுரை விமான நிலையங்களில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: மணிப்பூர் கலவரத்தில் பிரதமர் பெயில் ஆகிவிட்டார். பிரதமருக்கு வெளிநாடு சுற்றுவதற்குதான் அக்கறை உள்ளது. அவர் முதலில் மணிப்பூர்தான் சென்று இருக்க வேண்டும். அமெரிக்கா செல்வதற்கு என்ன அவருக்கு அவச ரம்? அவர் அமெரிக்கா சென்று, என்ன கொண்டு வந்தார்? கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதிலேயே தெரிகிறது, பிரதமர் மோடியின் பாப்புலாரிட்டி குறைந்து வருகிறது என்பது. பிரதமர் மோடி சும்மா அது பண்ண வேண்டும், இது பண்ண வேண்டும் என பேசிக்கொண்டுதான் இருக்கிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறும், ஆனால்மோடி பிரதமராக இருப்பாரா? என்று இப்போது சொல்ல முடியாது. பிரதமர் மோடி நல்லது செய்தார் என இங்கு உள்ள ஜால்ரா போடுபவர்கள்தான் கூறுகிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. மோடி எதுவும் செய்யவில்லை என பாஜக தொண்டர்கள் கூறுகிறார்கள். பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை பொறுத்தவரை ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது. எல்லா ரும் சேர்ந்து வந்தால் ஒற்றுமையாக செயல்பட்டால் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு சுப்பிரமணியசாமி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் பாஜக இருக்கிறதா..? “தமிழகத்தில் அண்ணாமலையின் வளர்ச்சி குறித்து கேட்டதற்கு தமிழகத்தில் பாஜக இருக்கிறதா? நான் தமிழ கத்தில் பாஜக-வை பார்த்ததே கிடையாது” என்றும் சுப்பிர மணியசாமி விமர்சித்துள்ளார்.