சென்னை, செப். 28- சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி யில் மதிமுக பங்கேற்கும் என பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள் ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில், இந்துத்து வாவை முன்னிலைப்படுத்தி மக்களை வர்ணாசிரம அடிப்படையில் பிளவு படுத்தும் சங் பரிவார் சக்திகள் அண்மைக்காலமாக தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் சதிச் செயல்களில் ஈடுபட்டு வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. இப்படிப்பட்ட சூழலில் உத்தமர் காந்தி பிறந்த நாள், பெருந்தலைவர் காமராசர் நினைவு நாள் ஆகிய சிறப் பிற்குரிய அக்டோபர் 2, அன்று நடை பெற உள்ள சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலியில் மதிமுக இணைந்து பங்கேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். இதில் மதிமுக தலைவர்களும் தொண்டர்க ளும், பங்கேற்பார்கள் என்று வைகோ அதில் கூறியுள்ளார்.