states

பள்ளி முதல்வர் சஸ்பெண்ட் குஜராத் பாஜக அரசு பாய்ச்சல்

கட்ச், ஜூலை 2- பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பக்ரீத் பண்டிகையை முன் னிட்டு சிறிய அளவில் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா வில் முஸ்லிம் மாணவர்களுடன் இஸ்லாமிய குல்லா அணிந்து இந்து மாணவர்களும் நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி மத நல்லி ணக்கத்தின் எடுத்துக்காட்டு என பாராட்டுகளைக் குவித்தது.  ஆனால் மத வெறுப்பை வைத்தே குஜராத்தில் 23 ஆண்டுகள் ஆட்சி செய்து வரும் பாஜக அரசு, இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் பள்ளியில் பக்ரீத் விழா நடத்தியது மற்றும் இந்து மாணவர்களின் தலையில் இஸ்லா மிய குல்லா அணிவித்தது மிகப்பெரிய குற்றம் எனக் கூறி  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சஞ்சய் பர்மர் மூலம்  அந்த தனியார் பள்ளியின் முதல்வரை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதுகுறித்து கட்ச் மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் சஞ்சய் பர்மர், “இந்து மாணவர்களை முஸ்லிம்கள் அணியும் “இஸ்லாமிய குல்லா” அணியச் சொல்வது கீழ்த்தர மான செயல்” என ஒரே ஒரு கருத்தோடு மேற்கொண்டு எது வும் கூறாமல் செய்தியாளர்களிடமிருந்து நழுவிக் கொண்டார்.

;