மதுரை, ஜூலை 6- லஞ்ச ஊழல் வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படா மல் இருப்பதை ஏற்க முடியாது. லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் காரணம் இல்லாத தாமதத்தை அனு மதிக்க முடியாது என்று தெரி வித்துள்ள உயர்நீதிமன்றம், லஞ்ச ஒழிப்பு - கண்காணிப்புத்துறை இயக் குநர் நேரில் அல்லது காணொலி காட்சி வழியாக ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தர விட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் முனீர் அகமது. இவர் தன் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை 2017 இல் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை வியாழனன்று நீதிபதி கே.கே.ராம கிருஷ்ணன் முன்பு நடைபெற்றது. இதில் நீதிபதி பிறப்பித்த உத்தர வில், மனுதாரர் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி வழக்கில் சம்பந்தப் பட்ட மற்றவர்களுடன் சேர்ந்து இதே நீதிமன்றத்தில் 2017-இல் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய மறுத்து, 4 வாரத்தில் நீதி மன்றத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக் கல் செய்ய வேண்டும் என தனி நீதி பதி 23.8.2017 இல் உத்தரவிட்டுள் ளார். இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டு 6 ஆண்டுகளாகும் நிலையில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது அதிர்ச்சி யாக உள்ளது. பெரும்பாலான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வ தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மெத்தனமான அணுகுமுறையை பின்பற்றுவதற்கு இந்த வழக்கு சிறந்த உதாரணம்.
லஞ்ச ஒழிப்புத்துறையில் விசா ரணை அதிகாரி, துறை இயக்குன ரிடம் அனுமதி பெற்று குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்ய வேண்டும். உரிய காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறதா என் பதை கண்காணிக்க வேண்டியது இயக்குநரின் பணியாகும். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக் கல் செய்ய வேண்டும் என நீதி மன்றம் உத்தரவிட்டும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் படவில்லை. உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட தும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை யினர் விழிப்புடன் செயல்பட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருக்க வேண்டும். சமூக நலன் கருதியும், சாட்சிகள் நினைவு பிறழ் ஆகா மல் இருக்கவும் குறிப்பிட்ட காலத் திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். பல வழக்கு களில் சாட்சிகள் விசாரணை தொடங் குவதற்கு முன்பு இறந்து விடுகின்ற னர். இந்த வழக்கி்ல் நீதிமன்றம் உத்தரவிட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருப் பதை ஏற்க முடியாது. லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் காரணம் இல்லாத தாமதத்தை அனுமதிக்க முடியாது. எனவே லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குனர் 17.7.2023-இல் நீதிமன் றத்தில் நேரில் அல்லது காணொலி காட்சி வழியாக ஆஜராகி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கான தாமதத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தர விட்டுள்ளார்.