states

img

மரம் விழுந்து உயிரிழந்த 2 பேரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

திருநெல்வேலி ,மே 6- நெல்லை அருகே மரம் விழுந்து உயிரிழந்த 2 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நெல்லையில் இருந்து பாபநாசம் செல்லும் மெயின் ரோட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வரு கிறது. வியாழக்கிழமை காலை பத்தமடை குளத்துக் கரை பகுதியில் விரிவாக்க  பணியின்போது சாலை யோர மரம் ஆட்டோ மீது  விழுந்ததில் அதில் பயணம் செய்த பத்தமடை பள்ளிவா சல் 5-ஆவது வடக்கு தெருவை சேர்ந்த ஆட்டோ  டிரைவர் காதர் மைதீன் (வயது 35), கவர்னர் தெருவை சேர்ந்த மைதீன் பட்டாணி மனைவி ரகுமத் பீவி(28) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அதில் இருந்த காதர் மைதீன் மனைவி பக்கீராள்  பானு(32), மகன் ஷேக்  மன்சூர், ரகுமத் பீவியின்  மகள் அபிதா பாத்திமா(6) ஆகியோர் காயத்துடன் மீட்கப் பட்டனர். இதற்கிடையே உயி ரிழந்தவர்களின் உறவினர் கள் சேரன்மகாதேவி ரவுண் டானாவில் 4 புறங்களிலும் சாலை மறியலில் ஈடுபட்ட தால் கடுமையான போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. அவர்களிடம் சேரன்மகா தேவி சப்-கலெக்டர் சிந்து, டிஎஸ்பி ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

ஆனால் அதில் உடன்பாடு  ஏற்படவில்லை.இதற்கி டையே முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் உயிரிழந்த வர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.   போலீசார், பொக்லைன் ஆப்ரேட்டர், ஒப்பந்ததாரர் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.ஆனாலும் கூடுதல் நிவா ரணம் வழங்க வேண்டும், உயிரிழந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறி வெள்ளிக்கிழமை 2- ஆவது நாளாக அவர்களது உடலை வாங்க மறுத்து உற வினர்கள் போராட்டம் நடத்தி  வந்தனர். இதனால் பலியா னவர்கள் உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல்-அமைச்சர் அறிவித்த நிவா ரணநிதி தலா ரூ.10 லட்சத்திற் கான காசோலையை ஆட்சி யர் விஷ்ணு நெல்லை அரசு மருத்துவமனையில் பலியானவரின் உறவினர் களிடம் வழங்கினார்.மேலும்  காயம் அடைந்த 3 பேரின் குடும்பத்தினருக்கும் தலா  ரூ.1 லட்சத்திற்கான காசோ லையை வழங்கினார். அப்போது உயிரிழந்தவர்க ளின் உறவினர்கள் குடும்பத் தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.உங்களது கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என ஆட்சியர் கூறினார்.  அப்போது சேரன் மகாதேவி சப்-கலெக்டர் சிந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உடன் இருந்தனர்.அதன்பின்னர் பலியானவர்களின் உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.