தஞ்சாவூர், ஆக.19- அரசு மருத்துவமனைகளில் காலி யாக உள்ள மருந்தாளுநர் பணியிடங் களை உடனே நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக கோரிக்கை அட்டைகளை அணிந்து மருந்தாளுநர்கள் பணியாற்றினர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுநர்கள் கடந்த 16,17,18 ஆகிய மூன்று தினங்க ளும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கே.பாஸ்கரன் வியாழனன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சுமார் 1,300 மருந்தாளுநர் காலிப் பணியிடங் கள் உள்ளன. இந்த பணியிடங்களை உடனடியாக மருத்துவ தேர்வு வாரியம் மூலம் நிரப்ப வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவமனைகளில் கூடுதலாக மருந்தாளுநர் பணியிடங்களை உரு வாக்கிட வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகம் வழியாக முறையான இட ஒதுக்கீடு நடைமுறைகளை பின்பற்றி, பணி நியமனம் செய்யப் பட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் உள்ள 39 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மருந்தாளுநர்களை உடனடியாக பணி வரன்முறை செய்ய வேண்டும். தமிழகத்தில் 46 துணை இயக்குநர் அலுவலக மருந்து கிடங்குகளில் தலைமை மருந்தாளுநர் பணியிடத்தை உருவாக்கிட வேண்டும். மருந்தாளு நர்கள், தலைமை மருந்தாளுநர்கள், மருந்து கிடங்கு அலுவலர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து கடந்த மூன்று தினங்களாக மாநிலம் முழுவதும் மருந்தாளுநர்கள் கோரிக்கை அட்டை களை அணிந்து பணியாற்றினர்” என்றார்.