பனாஜி, செப்.15- தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப் பினர்களை, கால்நடைகளைப் போல பாஜக விலைக்கு வாங்குவதாகவும், மக் களை அவமதிப்பதாகவும் கோவா பார்வர்டு கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய் விமர்சித்துள்ளார். கோவா காங்கிரஸ் எம்எல்ஏ-க்களில் 8 பேர் பாஜகவில் இணைந்துள்ள நிலை யில், காங்கிரஸின் கூட்டணி கட்சியான கோவா பார்வர்ட் கட்சியின் தலைவரும், அந்த கட்சியின் ஒரே எம்எல்ஏ-வுமான விஜய் சர்தேசாய் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: பாஜகவுக்கு தாவுவதற்கு முடிவு செய்த அந்த (காங்கிரஸ்) எம்எல்ஏ-க்கள், அனைத்து அரசியல் உரிமை, அடிப்படைக் கண்ணியம், நேர்மை ஆகியவற்றுக்கு எதி ராக, செல்வத்தின் மீதான பேராசை மற்றும் பதவிக்கான பசியை தொடர இன்று தீமை யின் அடையாளமாக நிற்கிறார்கள். இதன் மூலம் கோவா மக்கள் முதுகில் குத்தப்பட்ட தாக உணர்கிறார்கள். ஆட்சியை தக்கவைக்க பாஜக வஞ்ச கத்தையும் சூழ்ச்சியையும் பயன்படுத்து கிறது. எம்எல்ஏ-க்கள் தங்களை கால்நடை களை போல விலைக்கு வாங்க அனுமதித்த னர். பொதுமக்கள் இந்த துரோகிகளை நிரா கரிக்க வேண்டும். அவர்கள் மக்களுக்கும், கடவுளுக்கும் எதிரிகள் என்று முத்திரை குத்தப்பட வேண்டும். அரசியல் விலகல் என்பது மக்களின் ஆணைக்கு துரோகம் இழைப்பது மட்டுமல்ல, கடவுளை இழிவு படுத்துவதும் கேலி செய்வதும் ஆகும். இவ்வாறு சர்தேசாய் குறிப்பிட்டுள் ளார்.