states

நாளொன்றுக்கு ரூ.1,612 கோடி சம்பாதித்த கவுதம் அதானி!

ஹூருண் இந்தியா பணக்காரர் பட்டியலில், 10.9 லட்சம் கோடி ரூபாய் (சுமார் 140 பில்லியன் டாலர்) சொத்துக்களுடன் கவுதம் அதானி முதலிடம் பிடித்துள் ளார். அதானியின் சொத்து மதிப்பு, கடந்த ஓராண்டில் 116 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 2021-ஆம் ஆண்டு வெளியான பட்டியலில் அதானியை விட, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம் பானி ரூ. 2 லட்சம் கோடி கூடுதலாக சம்பாதித்திருந்தார். ஆனால், 2022-ஆம் ஆண்டில், அம்பானியை விட அதானி ரூ. 3 லட்சம் கோடி கூடுதலாக சம்பாதித்து, அம்பானியை பின்னுக்குத் தள்ளியிருக்கிறார். 2012-இல் ‘ஹுரூண் இந்தியா’ பணக்காரர்கள் பட்டி யலை வெளியிடத் துவங்கியது முதல் அம்பானிதான் முத லிடம் வகித்து வந்தார். ஆனால், முதன்முறையாக அவரை அதானி தோற்கடித்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் கவுதம் அதானி நாளொன்றுக்கு ரூ. 1,612 கோடி சம்பாதித்துள் ளார். 2022-இல் மட்டும் தனது சொத்தை 60 பில்லியன் டால ருக்கு மேல் அதிகரித்துள்ளார். இது உலகின் மற்ற பணக் காரர்கள் சம்பாதித்ததை விட ஐந்து மடங்கு அதிகம். அதானி, கடந்த பிப்ரவரியில்தான் புளூம்பெர்க் தரவரி சைப் பட்டியலில், அம்பானியை முந்திச் சென்று, ஏப்ரலில்  செண்டிபில்லியனர் (நிகர சொத்து 100 பில்லியன் டாலர் அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள்) பட்டியலில் இடம் பிடித்தார். அதைத்தொடர்ந்து, கடந்த வாரம் ‘போர்ப்ஸ்’ வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் உலக பணக்காரர்க ளின் பட்டியலில் எல்விஎம்எச் (LVMH) குழுமத் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசை பின்னுக்குத் தள்ளி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி 2-ஆவது  இடத்திற்கு முன்னேறினார். இந்நிலையிலேயே ‘ஹூருண் இந்தியா’ நிறுவனம், அதானி நாளொன்றுக்கு ரூ. 1,612 கோடி சம்பாதித்துள் ளதாக தெரிவித்துள்ளது.

;