states

img

7 நாட்களுக்குள் அறிக்கை தர குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல்

ஹைதராபாத், ஜூன் 4- தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்சில் காருக்குள் வைத்து 17 வயது சிறுமியை ஐந்து பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர் பாக இரண்டு சிறார்கள் உட்பட மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளது.  கடந்த மே 28-ஆம் தேதி அன்று 17 வயதான சிறுமி ஐந்து பேர் கொண்ட கும்பலால் காரில் கடத்தப்பட்டுள்ளார். பின்னர் ஆள் நடமாட்டம் இல்  லாத பகுதியில் வைத்து அந்த  சிறுமி காருக்குள்ளேயே அந்த  கும்பலால் பலாத்காரம் செய் யப்பட்டுள்ளார். 

தனக்கு நடந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் இருந்த சிறுமி வீடு செல்லும் வரை ஏதும் சொல்ல வில்லை. வீட்டுக்குச் சென்ற பின்  னர் அவரது பெற்றோர் சிறுமி யின் கழுத்தில் இருந்த காயத்  தைப் பார்த்துள்ளனர். அப் போது அவர் தன்னுடன் காரில் வந்த சிலர் தன்னை பாலியல்  வன்கொடுமை செய்ததாகக் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் தந்தை ஜூபிளி ஹில்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஹைதராபாத்தில் உள்ள செல்  வாக்கு மிக்க அரசியல் குடும் பங்களைச் சேர்ந்த மூன்று சிறார்கள் மற்றும் இரண்டு 18 வயது இளைஞர்கள் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  பஞ்சாரா ஹில்ஸைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பெயரில் பதிவு  செய்யப்பட்ட பென்ஸ் காரை  காவல்துறையினர் கண்டுபிடித்  துள்ளனர். ஆனால் கும்பல்  பலாத்காரம் நடந்ததாகக் கூறப்  படும் இன்னோவாகாரை இன் னும் கண்டுபிடிக்கவில்லை. இந்தநிலையில் கும்பல் பாலியல் பலாத்காரம் தொடர்  பாக ஐந்து சந்தேக நபர்களில் மூன்று பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். சிறார்கள் சிறு வர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டனர். மேலும் இருவரை தேடி வருகிறோம் என மேற்கு மண்டல காவல்துறைத் தலை வர் ஜோயல் டேவிஸ் கூறி யுள்ளார்.

சம்பவம் சனிக்கிழமை நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் முதல் தகவல் அறிக்கை மூன்று நாட்கள் கழித்து மே 31- ஆம் தேதி தான் பதிவு செய்  யப்பட்டுள்ளது. முதல் தகவல றிக்கை பதிவு செய்வதில் தாம தம் செய்ததை தேசிய குழந்தை கள் பாதுகாப்பு ஆணையம் கண்டித்துள்ளது. இந்தப் பிரச்  சனை கவலைக்குரியது. தாமத மாக முதல் தகவலறிக்கை பதிவு  செய்யப்பட்டதற்கு காரணங்கள் கூறலாம். ஆனால். முதல் தக வலறிக்கை பதிவு செய்வதில் தாமதித்த அதிகாரி மீது நட வடிக்கை எடுக்கப்பட வேண் டும். அதை ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும். விசாரணையின் போது பாதிக்கப்பட்டவரின் அடையா ளம் தெரியாமல் இருப்பதை காவல்துறை உறுதி செய்ய  வேண்டும் என்று தேசிய குழந் தைகள் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது. ஏழு நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களின் வயதுச் சான்று, முதல் தகவலறிக்கை, பாதிக்கப்பட்டவரின் வாக்கு மூலங்களின் நகல், குற்றப்பத்தி ரிகையின் நகல், தற்போதைய நிலை உள்ளிட்ட விரிவான அறிக்கையை அளிக்குமாறும் காவல்துறையை தேசிய  குழந்தைகள் பாதுகாப்பு  ஆணையம் வலியுறுத்தியுள் ளது.