states

ஜி-20 நாடுகள் உதவ வேண்டும்

ஐ.நா. கோரிக்கை நியூயார்க், செப்.16- வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 நாடு கள், உலகை அச்சுறுத்தி வரும் சுற்றுச்சூழல் அபாயத்தை எதிர்கொள்வதற்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலா ளர் அண்டோனியோ குட்டெரஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “உலகின் மிகப்பெரிய நாடுகள் இந்த ஜி-20 அமைப்பில் இடம் பெற்றுள் ளன. பசுமைக்குடில் வாயுக்களை வெளியிடு வதில் 80 விழுக்காட்டிற்கு இந்த நாடுகள்தான் பொறுப்பானவையாகும். உலக அளவிலான வெப்ப அதிகரிப்பைக் குறைக்க வேண்டும் என் றால், பசுமைக்குடில் வாயுக்கள் வெளியிடப் படுவதும் குறைய வேண்டும். அதற்கான நட வடிக்கைகளை இந்த நாடுகள்தான் எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது பாகிஸ்தான் சந்தித்து வரும் சூழலை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளத்திற்கு இதுவரையில் அதிகாரப்பூர்வ மாக வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங் களின்படி, 1,400க்கு மேற்பட்டவர்கள் பலியாகி யிருக்கிறார்கள். அந்நாட்டின் தென்பகுதி முழு வதும் வெள்ளநீரால் சூழ்ந்துள்ளது. சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள் ளனர். இந்த பாதிப்பு, வெப்பமயமாதலால் ஏற்பட்டது என்று அந்நாட்டிற்குப் பயணம் மேற் கொண்டபோது, ஐ.நா. பொதுச் செயலாளர் குட்டெரஸ் சுட்டிக்காட்டிப் பேசியிருந்தார். எந்தெந்த நாடுகள், இந்த வெப்பமயமாதல் பிரச்சனைக்குக் காரணமாக இருக்கின்றனவோ அந்ந நாடுகளும் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன என்று குறிப்பிட்ட அவர், “இது வரை இல்லாத அளவுக்கு வறட்சி, அடங்காத நெருப்பு மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்பு பணக்கார நாடுகளையும் விட்டு வைக்கவில்லை” என்றார்.

;