states

இலவச மின்சாரத்தை 200 யூனிட் வரை நீட்டிக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள்

சென்னை,செப்.13- தமிழ்நாட்டில் புதிய மின்கட்டண உயர்வு  அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 100 யூனிட் இலவச மின்சாரத்தை 200 யூனிட் வரை மாற்றி னால் பாதிக்கப்பட கூடிய மக்களின் எண் ணிக்கையை குறைக்கலாம் என சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலக்கரி பற்றாக்குறை காரணமாக அனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி பாதிக்  கப்பட்டு மின்வெட்டு நிலவியது. இதனைத்  தொடர்ந்து தமிழ்நாடு அரசு மின்கட்டணத்தை உயர்த்துவது என்று பரிசீலனை செய்து வந்  தது. இந்நிலையில் மின்கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் பரிந்துரை செய்  தது. இதன் அடிப்படையில் கடந்த இரண்டு  நாட்களுக்கு முன்பு மின்கட்டண உயர்வானது  அமலுக்கு வந்துள்ளது. மேலும், ஆண்டு தோறும் கட்டணத் திருத்தம் செய்ய அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள புதிய  மின்கட்டண உயர்வின்படி, வீட்டு உபயோ கிப்பாளர்களுக்கான குறைந்தபட்ச கட்டணம்  இரண்டு மாதங்களுக்கு 400 யூனிட்கள் வரை  பயன்படுத்தி இருந்தால் ஒரு யூனிட்டுக்கு ரூ.4.50 ஆகவும், 400 முதல் 500 யூனிட்டுக்கு ரூ.3 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.6  ஆக உயர்ந்துள்ளது. மேலும், 500 முதல் 600 வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.8 ஆகவும், 600 முதல் 800 வரை  ரூ.9ஆகவும், 800 முதல் 1,000 வரை ரூ.10 ஆக வும் கட்டணம் வசூலிக்கப்படும்.1,000 யூனிட்டு களுக்கு மேல் பயன்படுத்தினால் ஒரு  யூனிட்டுக்கு ரூ.11 கட்டணமாக விதிக்கப்படு கிறது.

தனிப்பட்ட வீடுகள், முதியோர் இல்லங் கள், கைத்தறி போன்றவை அடுக்குகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து நுகர்வோருக்கும் 100 யூனிட் இலவச விநி யோகம் தொடரும். மேலும் மானியத்தை விரும்பாதவர்கள் தமிழ்நாடு மின்சார வாரி யத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்த பிறகு அதை திரும்பப் பெறலாம் என தெரிவிக் கப்பட்டுள்ளது. விளக்குகள், நீர் வழங்கல், லிப்ட், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், நீர் சுத்திகரிப்பு நிலையம், உடற்பயிற்சி கூடம் மற்றும் நீச்சல்  குளம் போன்ற அனைத்து பொதுவான பயன்  பாடுகளுக்கும் தனித்தனி கட்டணம் அறி விக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்க றிஞர்கள் உள்ளிட்டோர் தங்கள் தொழில் முறை வேலைக்கு வீட்டில் 200 சதுர அடி வரை  வீட்டு மின் உபயோகத்திலேயே பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. வீட்டு மின்  நுகர்வோருக்கு மாதம்தோறும் 20 ரூபாய்  முதல் 50 ரூபாய் வரை நிலைக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. புதிய இணைப்புக்கான கட்ட ணம் மற்றும் புதிய மின் மீட்டருக்கு வைப்பு  தொகைக்கான கட்டணமும் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மின்  கட்டணத்தை உயர்த்து வதைத் தவிர வேறு  வழியில்லை என்றும் மின்வாரியம் தெரி வித்திருந்தது. மின் கட்டண உயர்வு அறி விப்பை திரும்பப் பெற வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பொதுமக் கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஒன்றிய அரசு விலையை உயர்த்த  கொடுத்த அழுத்தமும், வெளிநாடுகளிலி ருந்து கொள்முதல் செய்யப்படும் நிலக்கரி யின் விலை அதிகமாக இருப்பதாலும் மின்  கட்டணம் உயர்த்துவதற்கு காரணம் என அரசு விளக்கம் அளித்துள்ளது.மேலும் மின்சார வாரியத்திற்கு தற்போது வரை 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி கடன் உள்ளது. மின் உற்பத்தி யை அதிகப்படுத்துவதற்கு மேலும் கடன் வாங்கும் நிலையில் மின்சார வாரியம் உள்ளது. இதனால் தான் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைக்கு மின்சார வாரி யம் தள்ளப்பட்டதாக கூறுகின்றனர். தமிழ்நாடு மின் வாரியம் சுமார் ரூ.1.60 லட்சம் கோடி கடனில் இருப்பதால், மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று  மின் வாரியம் தெரிவித்துள்ளது. எனினும், கருத்துக்கேட்புக் கூட்டங்களில் மின் கட்டண உயர்வுக்கு பொதுமக்களும், சிறு, குறு தொழில் நிறுவனத்தினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மின்கட்டண உயர்வை எதிர்த்து அரசி யல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும்  சமூக ஆர்வலர்கள் ஒரு சில கோரிக்கை களை மின்சார வாரியத்திற்கு வைத்துள்ள னர். இதை எல்லாம் அரசு மற்றும் மின்சார வாரி யம் கவனத்தில் எடுத்துக் கொள்ளுமா என் பது கேள்விக் குறியாக உள்ளது.

;