states

அசாமில் வெள்ளம்: பள்ளிகளுக்கு விடுமுறை

அசாம், ஜூன் 23-  அசாம் மாநிலத்தில் கடந்த சில  நாட்களாக பெய்து வரும் கனமழை  காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற் பட்டு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  அசாமில் பிரம்மபுத்திரா மற்றும்  பராக் ஆறுகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, கிட்டத்தட்ட 32 மாவட்டங்கள் வெள்ளத்  தில் மூழ்கி, பேரழிவை ஏற்படுத்தி யுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த தாகவும், 55 லட்சம் பேர் பாதிக்கப் பட்டுள்ளனர் எனவும் தகவல் வெளி யாகியிருந்தது.  இந்த நிலையில், அசாமில் வெள்  ளப்பெருக்கு காரணமாக அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஜூலை 25 வரை கோடை விடுமுறை அளிக்கப்படு வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கைக் கருத்தில் கொண்டு, பள்ளி மாணவர்களுக்கு கோடை விடு முறையை 5 நாட்களுக்கு முன்னரே  அறிவித்து மாநில அரசு உத்தர விட்டுள்ளது. அதன்படி, அசாமில் பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் 31 வரை கோடை விடுமுறை அறிவிக் கப்பட்ட நிலையில், தற்போது ஜூன் 25 முதல் ஜூலை 25 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.