states

வெடி விபத்துக்கு காரணம் என்ன?

கிருஷ்ணகிரி, ஜூலை 30- கிருஷ்ணகிரி பட்டாசு குடோ னில் ஏற்பட்ட வெடி விபத்துக் கான காரணம் குறித்து அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள் ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 9 பேர் உயிரி ழந்தனர். மேலும், 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சை தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெடி விபத்தில் 5 கடைகள்  தரைமட்டமானது. வெடி விபத்து நிகழ்ந்த இடத்தை மாவட்ட ஆட்சியர், காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வரு பவர்களை தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30) சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதையடுத்து, செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சக்கரபாணி கூறிய தாவது:- பட்டாசு கடை வெடிவிபத் துக்கு அருகிலிருந்த உணவ கத்தில் சிலிண்டர் வெடித்ததே காரணம் என தடயவியல் துறைத் அறிக்கை அளித்துள்ளது. எனினும் தற்போது கிருஷ்ணகிரி முழுவதும் உள்ள பட்டாசு குடோன்கள் கண்கா ணித்து உரிய ஆவணங்கள் இருக் கிறதா, பாதுகாப்பு நடைமுறை கள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரி வித்தார்.