states

img

‘வாதாபி கணபதியை’ வன்முறைப் பிள்ளையாராக்க வேண்டாம்!

இந்த ஆண்டு, ‘பிள்ளையாரை வைத்து அரசியல் செய்யா தீர்கள்’ என  நீதிமன்றம் கண்டி த்துள்ளது. அத்துடன் ஊர்வலமாக கொண்டு போகச் சொல்லி விநாயகர் கேட்டாரா என்பது போன்ற பல கேள்வி களை நீதிபதி கேட்டு, அமைதியாக நடந்துகொள்ள அறிவுறுத்தியுள்ளார். ஆனால் கலவரம் செய்ய வேண்டும் என நினைக்கும் வன்மதியாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என் பது அவர்களுக்குத்தான் தெரியும். இத்தகைய விநாயகர் ஊர்வல அரசியல், சுதந்திரப் போராட்டக் காலத்தில் மகாராஷ்டிராவில் திலக ரால் துவங்கப்பட்டது. அப்போது பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்க்க, சுதந்தி ரத்தின் மீதான பக்தியை இவ்வாறாக பாலகங்காதர திலகர் பயன்படுத்தி னார். ஆனால் இன்று, முஸ்லிம் சிறு பான்மை மக்களுக்கு எதிரானதாகவே விநாயகர் ஊர்வலத்தை நடத்து கிறார்கள் ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரங்கள். உண்மையில் பிள்ளையார் வழிபாடு பழங்காலத்தில் தமிழ்நாட்டில் இல்லை. அப்படி என்றால் எப்போது வந்தது? எங்கிருந்து வந்தது? யாரால் வந்தது? எப்படி வந்தது? கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வந்தது.  மாமல்லன் என்று போற்றப்படும் நரசிம்மவர்மன் காலத்தில் (கி.பி.630-668) வந்தது. எப்படி வந்தது என்றால், நரசிம்ம வர்மனின் தந்தை மகேந்திரவர்மனை சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி தோற் கடித்துவிட்டான். அவனை பழிவாங்கு வதற்காக நரசிம்மன் படையெடுத்துச் சென்றான். புலிகேசியின் தலைநக ரான வாதாபியை தீக்கிரையாக்கி னான். நரசிம்மனின் தளபதி பரஞ் சோதி, புலிகேசியின் குலதெய்வமான கணபதியின் கோவிலை அழித்தான்.

ஆனால் அங்கிருந்த கணபதி விக்கிர கத்தை (அதாவது பிள்ளையார் சிலை யை) தூக்கிக் கொண்டு வந்துவிட் டான். ஏனெனில், பரஞ்சோதி மிகப் பெரிய பக்திமான்.  அப்பர் எனப்படும் திருநாவுக்கரசர் இவர்களின் காலத்தவர் என்பது குறிப் பிடத்தக்கது. இவர் சமண மதத்தவ ராய் இருந்து, பின்னர் சைவ மதத்து க்கு மாறியவர். மன்னர் மகேந்திரவர் மனும் சமணரே. பின்னர்தான் பல்லவ  சாம்ராஜ்யத்தில் சைவ சமயம் வேரூன்றியது. அந்த சைவ சமய பரஞ்சோதிதான் வாதாபியிலிருந்து கணபதியை கடத்தி வந்தவன். அதனால்தான் பிள்ளையார், ‘வாதாபி கணபதி’ என்றழைக்கப்படுகிறார். அதாவது, ‘பிள்ளையார்’ என்பது தமிழ்நாட்டுப் பெயர். இந்தப் பிள்ளை யார் வந்தது இன்றைய மும்பையில் இருந்துதான். இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. எல்லா கோவில்களிலும் தெய்வச் சிலைகள் சிற்பிகளால் செய்யப்பட்டு நிறுவப்படும். அதாவது, பிரதிஷ்டை செய்யப்படும். ஆனால் பிள்ளையார் சிலை மட்டும், ஏதாவது ஒரு ஊரின்  கோவிலில் இருந்து திருடிக் கொண்டு  வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படும். இது இப்போது கொஞ்சம் மாறி யிருக்கிறது. ஆனால் இப்படிச் செய்வதன் அர்த்தம் பரஞ்சோதி, கணபதி சிலையை வாதாபியிலிருந்து கொண்டு வந்ததை நினைவு கூர்வதுதான். வாதாபி கணபதி, சண்டைக்குப் பின் கொண்டு வரப்பட்டவர். ஆனால்  இன்றைய பிள்ளையாரோ சண்டைக் காக, மதவெறியர்கள் சிலரால் வீதி களுக்கு கொண்டுவரப்படுகிறார். மொத்தத்தில் அமைதிப் பிள்ளை யாரை வன்முறைப் பிள்ளையாராக மாற்றுகிறார்கள். அவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என்பது நிச்சயம். - ப.முருகன்