உள்நாட்டு தொலைத்தொடர்பு நெட் வொர்க்குகள், அழைப்பாளர் அடையா ளத்தை (காலர் ஐடி) பயனாளர்களுக்கு வழங்க வேண்டும் என தொலைத்தொடர்புத் துறை (டிஓடி) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முன்மொழி வை வெளியிட்டது. இந்த முன்மொழிவை டிராய் தற்போது இறுதி பரிந்துரையை அரசிடம் சமர்ப் பித்துள்ளது.
பாஜக ஆளும் அசாம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் வேலை கேட்டு மருத்துவ மனைக்குச் சென்ற செவிலியரை பலாத்காரம் செய்ய முயன்ற மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திரா சட்டசபைத் தேர்தல் வரலாற்றில் தேர் தல் தேதி அறிவிப்புக்கு முன்பே வேட்பாளர் பட்டியலை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திர பாபு நாயுடு அறிவித்துள்ளார்.
ரயிலில் பயணிகளின் இருக்கைக்கே வந்து டெலி வரி செய்யும் முறையை ஸ்விக்கி மூலம் அறி முகம் செய்யஉள்ளதாக ஐஆர்சிடிசி அறி வித்துள்ளது.
பேஸ்புக் போலவே வாட்ஸ்ஆப்-பிலும் புரொ பைல் படங்கள் (முகப்பு) பாதுகாப்புக்கு என புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்கிறது. அதாவது வேறு ஒரு நபர் தங்களது முகப்பு படங்களை ஸ்க்ரீன்ஷாட் செய்தால் இனி வாட்ஸ் ஆப் செயலி எச்சரிக்கை தெரிவிக்கும்.
உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதி யில் கங்கையில் புனித நீராட பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னதில் 15 பேர் உயிரிழந்தார்.
இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை முதல் அம லுக்கு வரும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் ஆகி யவை மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பி டத்தக்கது.
ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட் டத்தில் உள்ள பரவுடா கிராமத்தைச் சேர்ந்த வர் சுக்விந்தர். இவர் கடந்த 2021 பிப்ரவரி 12 அன்று மனோஜ் மாலிக், அவரது மனைவி சாக்சி மாலிக், அவர்களின் மகன் சர்தாஜ் (4), மல்யுத்த பயிற்சியாளர்கள் சதீஷ் குமார், பர்தீப் மாலிக், மல்யுத்த வீராங்கனை பூஜா ஆகி யோரை சுட்டுக் கொன்றார். வழக்கில் மனோஜ் மாலிக்கிற்கு ரோத்தக் நீதிமன்றம் மரண தண் டனை விதித்துள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஏற்கெ னவே பணியாற்றிய தொகுதிக்குள் மீண்டும் வராதவாறு அரசு அதிகாரிகள் பணியிட மாற்றங் களை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறி வுறுத்தியுள்ளது.