சென்னை, செப்.25- தமிழ்நாட்டில் 10 மாவட்டங்க ளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரியில் ஓரிரு இடங்க ளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதி களில் ஒரு வளிமண்டல மேல டுக்கு சுழற்சி நிலவுகிறது. ஜூன் மாதம் தொடங்கிய தென் மேற்கு பருவமழை முடிவுக்கு வரும் நிலையில், இம்மாத இறு தியில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பகலில் சுட்டெரிக்கும் வெயில், இரவில் மழை பெய்வதும் என வித்தியாசமான வானிலை நிலவு கிறது. தென்மேற்கு பருவ மழை யானது ஜூன் முதல் செப்டம்பர் முடியும் வரை இருக்கும். அதை தொடர்ந்து, அக்டோபர் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி டிசம்பர் வரை மழை பொழிவை ஏற்படுத்தும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தாமதமாக தொடங்கியது. தமிழ்நாட்டில் எதிர்பார்த்த அள விற்கு மழை பெய்யவில்லை. இந்த நிலையில் தான், தென் மேற்கு பருவமழை விலகத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 3 வது வாரத் திற்கு பிறகு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை காலத்தில் பெய்யும் மழை தான் அதிக அளவில் கை கொடுக் கும் என்பதால் விவசாயிகளின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் இயல்பை விட அதிக மாக மழை பதிவாகியிருந்தது. அதேபோன்று இந்த மாதம் தொடக்கம் முதல் பருவமழை யின் அளவு அதிகமாக இருந்தது. குறிப்பாக சென்னையில் தினமும் இரவு நேரங்களில் மழை தொடர்ந்து பெய்து வந்தது. ஆனால் பகல் நேரங்களில் கோடை காலத்தை போன்ற வெயில் சுட்டெரித்தது. இரவில் மழையும், பகலில் சுட்டெரிக்கும் வெயில் என வித்தியாசமான வானிலை சென்னையில் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.