சென்னை,ஜன.3- ஊழியர்களை மிரட்டும் கரூர் கம்பெனி கும்பல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜனவரி 10 அன்று காவல்துறை இயக்குநரிடம் முறையீடு செய்வது என்று டாஸ்மாக் தொழிற்சங் கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளில் கரூர் கம்பெனி என்ற பெயரில் துறை அமைச்சரின் பெயரை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் கமிஷன் கேட்டு ஊழியர்களை மிரட்டி வரு கின்றனர். இத்தகைய நபர்கள் குறித்து புகார் தெரிவிக்கும் ஊழி யர்களை பாதுகாப்பதற்கு மாறாக டாஸ்மாக் அதிகாரிகள் சம்பந்தப் பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இந்த கும்பல் உரிமம் இல்லாமல் மதுக்கூடங்களை நடத்து வதால் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் டாஸ்மாக் அதிகாரி கள் ஊழியர் கூட்டங்களை நடத்தி இந்த கும்பலுக்கு கமிஷன் கொடுக் கும்படி ஊழியர்களை நிர்ப்பந் தம் செய்து வருகின்றனர். இதனால் டாஸ்மாக் ஊழியர்களின் உயிருக் கும் உடமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கும்பலால் டாஸ்மாக் கடை களில் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னதாக காவல்துறை தலை யிட்டு கரூர் கம்பெனி என்ற பெயரில் செயல்படும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். இந்த கும்பலை இயக்கும் நபர்களை கண்டறிய வலியுறுத்தியும் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஜனவரி 10 அன்று சென்னையில் காவல் துறை தலைமை இயக்கு நரிடம் முறையிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் திருச் செல்வன் தெரிவித்துள்ளார்.