சென்னை, ஜூன் 11- கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழ கத்தில் இன்று (ஜூன் 12) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனால் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் ஊர்களுக்கு திரும்பியதால் பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. ஜூன் 11 அன்று காலை மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, கன்னி யாகுமரி, நெல்லை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் சென்னை கோயம்பேடுக்கு வந்தனர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் தீவிரமாக செயல்பட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.