புதுச்சேரி,செப்.9- புதுச்சேரி மாநில உரிமை மீட்க செப்டம்பர் 20 முதல் 26 வரை 200 கிமீ பிரச்சார நடைபயணம் நடைபெற வுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:- சட்டப்பேரவைத் தேர்தலின் போது என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குறிப்பாக ஆட்சிக்கு வந்தால் ரேசன் கடைகளை திறப்போம் என்றனர். ஆனால், வங்கிக் கணக்கில் செலுத்திய பணத் தையும் பயனாளிகளுக்கு தருவதை நிறுத்தி விட்டனர். அண்டை மாநிலங் களான தமிழகம், கேரளத்தில் ரேசனில் பொருட்கள் தரும் நிலை யில் புதுச்சேரியில் ரேசன் கடைகள் மூடப்பட்டுள்ளன. நாட்டிலேயே புதுச்சேரியில்தான் ரேசன் கடைகள் மூடப்பட்டுள்ளன. ரேசனில் பொருட்கள் தர ஒதுக்கப் பட்ட நிதியை வெள்ள நிவார ணத்துக்கு தந்துவிட்டதாக முதல்வர் தெரிவிக்கும் சூழல் உள்ளது. பாஜ கவைச் சேர்ந்த துறை அமைச்சர் சாய் சரவணக்குமாரோ, கட்சியின ருக்கோ, ஊடகத்துக்கோ, மக்களு க்கோ அறிவிக்காமல் தனது தொகுதி மக்களை அழைத்து வந்து ரேசன் கடை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தை ரகசியமாக நடத்தும் அவலம் உள்ளது. இதுபோல் பல பிரச்சனைகளில் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். “மாநில உரிமை மீட்போம், புதுச்சேரி மக்கள் நலன் காப்போம்’’ என்ற தலைப்பில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் செப்டம்பர் 20 முதல் 26 வரை 200 கி.மீ. மீட்டர் பிரசார நடை பயணம் மாநிலச் செயலர் ஆர். ராஜாங்கம் தலைமையில் நடை பெறவுள்ளது.
ஒன்றிய அரசு, ஆசிரியர் தினத் தன்று கல்வித்துறைக்கு ரூ.27,000 கோடியை ஒதுக்கி, புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் புதிய திட்டநிதி ஒதுக்கீடு இல்லை என பிளாக்மெயில் செய்துள்ளது. அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கி ணைத்து ரேசனில் பொருட்கள் தரும் வரை வலுவான இயக்கத்தை சிபிஎம் முன்எடுக்கும். பாஜகவைத் தோற்க டிக்க அகில இந்திய அளவில் ஒரே அணியில் அனைத்து எதிர்க்கட்சி களும் வருவது அவசியம். தேசிய அளவில் இல்லாவிட்டாலும் மாநில அளவில் ஒருங்கிணைந்து வெல்ல வாய்ப்புகளை உருவாக்கி வரு கிறோம்’. இவ்வாறு ராமகிருஷ்ணன் தெரிவித்தார். முன்னதாக கேரளம், தமிழ கத்தில் வழங்கப்பட்டு வரும் அரிசி, சர்க்கரை,கோதுமை, பருப்பு ஆகிய பொருட்களை பத்திரிகையா ளர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் காட்சிப்படுத்தினார். பின்னர் புதுச்சேரி மாநிலக்குழு அலுவல கத்தில் புதியதாக அமைக்கப் பட்டிருந்த ஊடக பிரிவையும் அவர் திறந்து வைத்தார். இச்சந்திப்பின் போது மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், சுதா சுந்தரராமன், மாநில செயற்குழு உறு ப்பினர் வெ. பெருமாள், ராமச் சந்திரன், தமிழ்ச்செல்வன், பிரபு ராஜ், சத்தியா, சீனிவாசன் ஆகி யோர் உடனிருந்தனர்.