states

தொடரும் தீண்டாமையின் கோரமுகம்!

தென்காசி, செப்.17- தென்காசி மாவட்டம் சங்க ரன்கோவில் வட்டம் பெரும் பத்தூர் கிராமம் மஜரா பாஞ்சாங்  குளத்தில் பட்டியலின குழந்தை களுக்கு மாற்று இனத்தைச் சேர்ந்தவர்களின் கடைகளில் எவ்வித தின்பண்டங்களும் வழங்கக் கூடாது என்று கூறி வாட்ஸ் அப் மூலம் வீடியோ பதிவு  பரவியதைத் தொடர்ந்து உடனடி யாக விசாரணை செய்யப்பட்டது.  தென்காசி அருகே மஜரா பாஞ்சாங்குளத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பட்டிய லின மக்களுக்கும் மாற்று ஜாதி யினருக்கும் இடையே நடந்த பிரச்சனை தொடர்பாக இரு தரப்பினரும் வழக்கு தொடுத்து நிலுவையில் உள்ளது.  தற்போது மாற்று சமுதா யத்தைச் சேர்ந்த ராமகிருஷ் ணன் என்பவர் ஒன்றிய அரசு  பணிக்கு தேர்வாகிய நிலையில், பட்டியலின சமுதாய மக்களிடம் சென்று ராமகிருஷ்ணன் பேரில் உள்ள வழக்கினை வாபஸ் பெறுமாறு மாற்று சமூகத்தினர் கேட்டுள்ளனர். 

இதற்கு பட்டியலினத்த வர்கள் தங்கள் மீது போடப் பட்டுள்ள வழக்கினை வாபஸ் பெற்றால்,  ராமகிருஷ்ணன் மீது போடப்பட்டுள்ள வழக்கினை வாபஸ் பெறுகிறோம் என்று கூறியுள்ளனர்.  இதனைத் தொடர்ந்து மாற்று சமூகத்தைச் சேர்ந்த நாட்டாமை மகேஷ் என்பவர் நடத்தி வரும் பெட்டிக்கடையில் பட்டியலின சிறுவர், சிறுமிகள் தின்பண்டங்கள் கேட்டதற்கு தர மறுத்துள்ளதாக எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலை தளத்தில் பரவின.  இதுதொடர்பாக கரிவலம்  வந்தநல்லூர் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து, மகேந்திரன், ராமச்சந்திரன் என்ற மூர்த்தி ஆகியோரை கைது செய்துள்ளனர்.  இந்நிலையில், மஜரா பாஞ்சாங்குளத்தில் மகேஷ் என்பவர் நடத்தி வந்த பெட்டிக் கடை சங்கரன்கோவில் வட்  டாட்சியரால் சனிக்கிழமை யன்று தற்காலிகமாக சீல்  வைக்கப்பட்டது என மாவட்ட  ஆட்சியர் ஆகாஷ் தெரிவித் துள்ளார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆய்வு

இந்த நிகழ்வு குறித்து கேள் விப்பட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட துணைச் செயலாளர் குமார், மாவட்டக் குழு உறுப்பினர் செல்  வின் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.  பின்னர் அவர்கள் கூறும்  போது, மஜரா பாஞ்சாங் குளத்தில் சிறுவர், சிறுமி களுக்கு ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் தின்பண்டம் வழங்க  மறுத்தது மிகப்பெரிய குற்ற மாகும். மேலும் தற்போது அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.  அவர் மீது சட்டரீதியாக கடு மையான நடவடிக்கை எடுத்து  உரிய தண்டனையை மாவட்ட  நிர்வாகம் பெற்று தர வேண்டும்.  மேலும் கிராமத்தில் அமைதி யை காவல் துறையும் வருவாய் துறையும் உருவாக்க வேண்டும் என்று கூறினர். 

சிபிஎம் மனு

தீண்டாமை பிரச்சனை சம் பந்தமாக சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் கிருஷ்ண ராஜிடம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தென்காசி மாவட்டக் குழு சார்பில் மாவட்டச் செயலாளர் உ.முத்துப்பாண்டி யன், தீண்டாமைக் கொடுமை யால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் அமைதியை நிலை நிறுத்த வேண்டும் என்றும், குற்றம்  புரிந்தவர்களுக்கு கடுமை யான தண்டனையை வாங்கி தர வேண்டும் என்றும் வலி யுறுத்தி கோரிக்கை மனுவை வழங்கினார்.  இந்த நிகழ்வில் கட்சியின் சங்கரன்கோவில் தாலுகா செயலாளர் அசோக் ராஜ் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 

;