சென்னை,ஜன.27- ஈரோடு கிழக்குத்தொகுதி சட்ட மன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்திட வேண்டும் வாக்காளப் பெருமக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் ஜனவரி 25 புதனன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. சுகுமாறன் தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி க்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா அவர்கள் மரண மடைந்ததையொட்டி நடக்கும் இந்த இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட் பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவிப்பதுடன், தேர்தலில் மகத்தான வெற்றி பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பணியாற்றும்.
எளிய மக்கள் மீது பொருளாதார தாக்குதல்களை ஒருபுறமும், சாதி மதத்தின் பெயரால் மக்களை கூறு போடுகிற அணுகுமுறையை மறு புறமும் கையாளும் எதேச்சதிகார பாஜக மற்றும் அதன் கூட்டாளியாக செயல்படும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளை படுதோல்வி அடையச் செய்வதன் மூலம் தமிழகத்தில் இச்சக்திகளுக்கு இட மில்லை என்பதை இந்த இடைத் தேர்தல் மூலம் பறைசாற்றப்பட உள்ளது.
இத்தேர்தலில் மதவெறி சக்தி களை முறியடிக்கும் நோக்கோடு மக்கள் நீதி மையத்தின் தலை வர் கமல்ஹாசன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாள ருக்கு ஆதரவு தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது. நடப்பது ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தல் என்றாலும், இன்றைய அரசியல் சூழலில் மக்கள் யார் பக்கம் என்பதைக் காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமையில் நம்பிக்கை கொண்ட அனைத்து சக்திகளும், கட்சிகளும் ஈ.வி.கே.எஸ் இளங்கோ வனின் வெற்றிக்குப் பாடுபட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்க ளும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவ னுக்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான முறையில் வெற்றிபெறச் செய்ய வேண்டுமெனவும் சிபிஎம் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இந்த இடைத்தேர்தலில் சிபிஎம் ஈரோடு மாவட்ட முன்னணி நிர்வாகிகள், கட்சி தோழர்கள், தொழிற்சங்க, விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு களைச் சார்ந்த தோழர்கள் முழுவீச்சோடு தேர்தல் பணியாற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.