states

தோழர் வி.வி.கிரி மறைவு தலைவர்கள் நேரில் அஞ்சலி

உதகமண்டலம், டிச.25- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலை வரும், நீலகிரி மாவட்டத்தில் செங்கொடி இயக்கத்தை வலுப்படுத்தியதில் முதன் மையானவருமான தோழர் வி.வி.கிரியின் மறைவிற்கு தலைவர்கள் தங்களின் இறுதி அஞ்சலியை செலுத்தினர். உதகை இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்  சாலையின் தொழிலாளியாக இணைந்து, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு தொழிற்  சங்கத்தை வளர்த்து எடுத்த வர் தோழர் வி.வி.கிரி. தொழி லாளர்களின் உரிமைகளுக் கான போராட்டத்தை முன்  னின்று நடத்தி தலைமை யேற்றவர். சிஐடியு நீலகிரி மாவட்டச் செயலாளராக வும், மாநிலக்குழு உறுப்பி னராகவும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்ட செயற்குழு உறுப்பி னராகவும், ஸ்டெர்லிங் பயோ டெக் தொழிற்சங்க தலைவ ராகவும் திறம்பட பணியாற்றி யவர். உதகை உழைக்கும் மக்களின் அன்பைப்பெற்ற தோழர் கிரி உடல் நலக் குறைவு மற்றும் வயது மூப்  பின் காரணமாக காலமானார்.  இவரின் மறைவு செய்தி அறிந்து, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் கே.காம ராஜ், ஆர்.பத்ரி, நீலகிரி மாவட்டச் செயலாளர் வி.ஏ. பாஸ்கரன், கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், மூத்த தலைவர்கள் என்.வாசு, கே.துரைராஜ், ப.மாரி முத்து, சிஐடியு கோவை மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, நீலகிரி மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் சங்கரலிங்கம், வினோத், பி.ராமன்குட்டி, கே.சுந்தரம் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.நவீன் சந்திரன் உள்ளிட்ட திரளானோர் இறுதி நிகழ்  வில் பங்கேற்று செவ்வஞ்சலி செலுத்தினர்.