இராமநாதபுரம்,அக்.15- சிஐடியு தமிழ்நாடு மாநில பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் ராமநாதபுரம் அண்ணா நகர் தோழர் பி.ஆர். நினை வகத்தில் மாநிலத் தலைவர் எம். சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் எம்.அசோ கன், மாநிலப் பொருளாளர் சக்திவேல் மாவட்டச் செயலாளர் வெங்கடசுப்பிர மணியன் உள்பட மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.இக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இராம நாதபுரம் மாவட்டம் கமுதக்குடி பயோனியர் மில் உட்பட என்டிசி பஞ்சா லைகளை இயக்க ஒன்றிய பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு பஞ்சாலை தொழிலாளர்க ளுக்கு ஊதிய ஒப்பந்தம் 2020 டிசம்பரில் முடிவடைந்துவிட்டது.
இந்நிலையில் 25- 4- 2022 மாநில கைத்தறித்துறை அமைச்சர் முன்னி லையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊதிய உயர்வு 2500 ரூபாய் காலம் தாமதம் இல்லாமல் தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு பஞ்சாலைகளில் தினக்கூலி மற்றும் என் எம் ஆர் தொழிலாளர்களை சட்டப் படி நிரந்தரம் செய்ய வேண்டும். கூட்டுறவு பஞ்சாலைகளில் நிர்வாகம்- தொழிலாளி உறவை ஒப்பந்த முறை யில் தொழிலாளர்களிடம் வேலை வாங்கும் தனியார் சுரண்டல் முறையை கைவிட வேண்டும். தமிழக அரசு ஆணைப்படி பஞ்சாலைத் தொழிலா ளர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் தினந்தோறும் 493 ரூபாய் வழங்க வேண்டும். 2022 செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இஎஸ்ஐ மருத்துவ திட்டம் அமலாகி உள்ளது. 10 பேருக்கு மேல் பணி புரியும் தொழிற்சாலைகளில், 20 பேருக்கு மேல் பணி புரியும் நிறுவ னங்கள் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவ திட்டம், இஎஸ்ஐ, பணப்பலன்கள் தொழிலாளர்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும் பஞ்சாலை தொழிலாளர்களுக்கு கூடு தலான தீபாவளி போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.