states

காவிரியில் 3,000 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை

புதுதில்லி, செப். 26 - தமிழகத்திற்கு காவிரியில் 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை அளித்துள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் 87-ஆவது கூட்டம், செவ்வாயன்று காணொலி மூலம் நடைபெற்றது.  இதில், காவிரியில் விநாடிக்கு 12,500 கனஅடி நீர் திறக்க கர்நாடகா விற்கு உத்தரவிட வேண்டும்; குறிப்பாக, அக்டோபர் மாதத்திற் கான 20.22 டிஎம்சி நீரை உரிய நேரத்தில் திறக்க நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்தது. ஆனால், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 53  சதவிகிதம் மழை பற்றாக்குறை நீடிப்ப தாக கர்நாடகம் வாதிட்டது.  இந்த இருதரப்பு வாதங்களைக் கேட்ட காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு, தமிழ்நாட்டுக்கு காவிரியி லிருந்து விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணை யத்திற்கு பரிந்துரை அளித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்று கர்நாடகத்தில் முழு  அடைப்புப் போராட்டங்கள் நடை பெற்றாலும், மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தற்போது வரை கர்நா டகம் முறையாக காவிரியில் தண்ணீ ரை திறந்துவிட்டு வருவது குறிப்பிடத் தக்கது. குறிப்பாக செவ்வாயன்று காலை 7 ஆயிரம் கன அடி அளவிற்கு தண்ணீரை திறந்து விட்டுள்ளது.  தமிழ்நாட்டு பேருந்துகள் நிறுத்தம் கன்னட அமைப்புகள் பந்த் அறிவித் திருந்தாலும் வழக்கம்போல பேருந்து கள் ஓடும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். எனினும், முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக பெங்களூரு செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்துகள் ஓசூரி லேயே நிறுத்தப்பட்டன. தமிழகப் பயணிகள் நகரப்பேருந்துகளில் ஜூஜூவாடி சென்று அங்கிருந்து பெங்களூரு சென்றனர்.