கேள்விநேரத்திலிருந்து....
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியாழ னன்று (மே5) கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்கு அமைச்சர்கள் அளித்த பதில் வருமாறு:
குமரி மாவட்டத்தில் கடல் அரிப்பு என்பது ஒரு சோகக்கதை. வட்டக்கோட்டை யிலிருந்து லெமுரியா வரைக்கும் 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரை உள்ளது. இதில் 50 கி.மீ. தூரத்திற்கு தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. தெக்குறிச்சி மீனவ கிராமம் கடல் அரிப்பால் அதிகம் பாதித்துள்ளது. அங்கு சுமார் 400 மீட்டருக்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். இதற்காக ரூ.3.5 கோடியில் திட்ட மதிப்பீடும் ஒன்று தயார் செய்யப் பட்டிருக்கிறது. ஏற்கெனவே, 1500 மீட்டர் தூரத்திற்கு தடுப்பு சுவர் கட்டிதரப்பட்டது. அதுவும் கடல் சீற்றத்தால் அடித்து செல்லப்பட்டது. இதை சீரமைக்க 4.6 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அதாவது ரூ.8 கோடிக்கு திட்டம் தயார் செய்யப்பட்டு அரசிடம் ஒப்புதல் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். வங்கக் கடலில் 11 கி.மீ தூரமும் அரபிக் கடலில் 59 கி.மீ தூரமும் குமரிமாவட்ட கடற்கரை பகுதியில் வருகிறது. ஒரு புறம் தடுப்பு சுவர் கட்டப்படுகிறது. மறுபுறம் கடல் அலை அரித்துக்கொண்டே செல்கி றது. மீண்டும் தடுப்பு சுவர் கட்டப்படும் இது தொடர்கதையாகும். குமரி மாவட்டத்திற்கு அடுத்து மிகவும் ஆபத்தாக இருக்கும் மாவட்டம் ஒன்றுபட்ட தஞ்சைமாவட்டம்தான். அதிலும் நாகப்பட்டினம் பகுதியில் கடல் அரிப்பால் தண்ணீர் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை பாழ்படுத்தி யுள்ளது. அதுமட்டுல்ல, குடி தண்ணீருக்கும் பஞ்சத்தை ஏற்படுத்தி யிருக்கிறது. ஆகவே, 35 கி.மீ. தூரத்திற்கு கடல் அரிப்பை தடுப்பதற்கான நடவடிக் கைகளை அரசும் துறையும் மிக கவனமாக மேற்கொள்ளும். அதற்கான கட்டாயமும் உள்ளது என்று நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.